பொதுத்தேர்வு விடைத்தாளில் மாணவன் எழுதிய விடை - திருத்திய ஆசிரியர் அதிர்ச்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 22, 2024

பொதுத்தேர்வு விடைத்தாளில் மாணவன் எழுதிய விடை - திருத்திய ஆசிரியர் அதிர்ச்சி



பொதுத்தேர்வு விடைத்தாளில் மாணவன் எழுதிய விடை - திருத்திய ஆசிரியர் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு விடைத்தாளில் மார்க் போடாவிட்டால் சூனியம் வைப்பேன் என்று மாணவன் எழுதியிருந்ததால் விடைத்தாள் திருத்திய ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.

ஆந்திராவில் கடந்த மார்ச் மாதம் 10ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு மாணவன், ஆசிரியரை பயமுறுத்தும் வகையில் பதில் எழுதியுள்ளார்.

அதன் விவரம்:

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் பாபட்லா மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவர்கள் எழுதிய தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டது. இதில் ஒரு மாணவன் தெலுங்கு தேர்வில் ராமாயணம் பற்றி எழுதுமாறு கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, உரிய பதிலல எழுதாமல், ‘எனது விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு, எனக்கு அதிகமாக மார்க் போட வேண்டும்.

இல்லாவிட்டால் எனது தாத்தாவிடம் கூறி மாந்திரிக பூஜை செய்து உங்களுக்கு சூனியம் வைத்துவிடுவேன்’ என எழுதி இருந்தான். இதை பார்த்த ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த விடைத்தாள் மேலதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் அந்த மாணவன் மற்ற விடைகளுக்கு அளித்த பதில் மூலம் 100க்கு 70 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் நேற்று முதல் ஆந்திராவில் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.