சைனிக் பள்ளியில் ரூ.29,200/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 19, 2024

சைனிக் பள்ளியில் ரூ.29,200/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2024



சைனிக் பள்ளியில் ரூ.29,200/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளி ஆனது தனது நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.Quarter Master பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பிக்குமாறு அழைக்கப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு செய்திகள் 2024

நிறுவனம் Sainik School Amaravathinagar (Sainik School Amaravathinagar)

பணியின் பெயர் Quarter Master

பணியிடங்கள் 01

விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2024

விண்ணப்பிக்கும் முறை Offline

சைனிக் பள்ளி காலிப்பணியிடங்கள்:

சைனிக் பள்ளியில் Quarter Master பதவிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் காலியாக உள்ளது. வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 30.04.2024 அன்றைய நாளின் படி, 21 முதல் 50 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

கல்வி தகுதி:

Quarter Master பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது கல்வி நிலையங்களில் B.A./ B.Com தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

அனுபவம்:

குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சைனிக் பள்ளி தேர்வு செய்யும் முறை:

1. Short Listing

2. Written Test / Skill/Trade tests and Personal Interview சைனிக் பள்ளி ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் தகுதியான நபருக்கு ரூ.29,200/- மாத ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைனிக் பள்ளி விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை Officer Incharge, Amar Sainik School, Amaravathinagar (Tamilnadu) என்ற அலுவலக முகவரிக்கு இறுதி நாளுக்குள் (30.04.2024) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

CLICK HERE TO Download Notification

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.