CEO, DEO அலுவலகங்களை ஏப்.10-க்குள் காலிசெய்ய கல்வித்துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 2, 2024

CEO, DEO அலுவலகங்களை ஏப்.10-க்குள் காலிசெய்ய கல்வித்துறை உத்தரவு



"சிஇஓ - டிஇஓ அலுவலகங்களை காலி செய்க"

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும்  சிஇஓ, டிஇஓ அலுவலகங்களை ஏப்.10-க்குள் காலிசெய்ய கல்வித்துறை உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் 151 கல்வி அலுவலகங்களை வாடகை கட்டடங்களுக்கு மாற்றவும் உத்தரவு

பள்ளி வளாகத்தில் செயல்படக்கூடிய கல்வி அலுவலகங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு உத்தரவு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் கடிதம் Letter No.2756/GL1(1)/2024-1. Dated:28.03.2024 மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 6836/ கே4/ 2024, நாள்: 02-04-2024...

பள்ளி வளாகத்தில் செயல்படக்கூடிய கல்வி அலுவலகங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு உத்தரவு!!!

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்கள் பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவருவதாகவும் , அது பள்ளி நிர்வாகத்திற்கு இடையூறாக உள்ளதாகவும் அறிக்கை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகங்களை உடனடியாக பள்ளி வளாகத்திற்கு வெளியே ஏதேனும் ஒரு வாடகைக் கட்டிடத்திற்கு இடம் மாற்றம் செய்து , அதற்கு பொதுப்பணித்துறையால் நிர்ணயம் செய்யப்படும் வாடகையினை நிர்ணயம் செய்து கொள்ளவும் அதற்கான கருத்துருவினை 30.04.2024 க்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்கள் பள்ளிக் கட்டிடங்களில் செயல்படவில்லை என்பதை கண்டிப்பாக உறுதி செய்தல் வேண்டும் என்றும் , இல்லையெனில் மேற்காணும் பணியினை செயலாக்கம் செய்யப்படவில்லை என்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் இயங்கி வரும் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்களை பொதுபணித்துறை நிர்ணயிக்கும் வாடகையின் அடிப்படையில் உடனடியாக இடம் மாற்றம் செய்து விட்டு அதன் அறிக்கையினை 10.04.2024 க்குள் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறும் மற்றும் வரும் கல்வி ஆண்டில் , பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் எந்த ஒரு முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்களும் செயல்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறது

பள்ளி வளாகத்தில் செயல்படக்கூடிய கல்வி அலுவலகங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு உத்தரவு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் கடிதம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.