அலுவலக மின் ஆளுமை (e-office) நடைமுறைப்படுத்துதல் - DSE செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 17, 2023

அலுவலக மின் ஆளுமை (e-office) நடைமுறைப்படுத்துதல் - DSE செயல்முறைகள்



அலுவலக மின் ஆளுமை (e-office) நடைமுறைப்படுத்துதல் - DSE செயல்முறைகள் Implementation of e-office – DSE processes

அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகங்களில் மின் ஆளுமை (e-Office) நடைமுறைப்படுத்தும் பொருட்டு முதன்மைக்கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகங்களில் கோப்புகளை கையாளும் பணியாளர்களின் விவரங்கள் பார்வை -3ல் காண் கடிதத்தின்படி பெற்றிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக முதன்மைக்கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி தங்கள் ஆளுகைக்குட்பட்ட உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கோப்புகளை கையாளும் தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களின் விவரங்களை கூடுதலாக சமர்பிக்க இயக்குநர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் கோரப்பட்டுள்ளது.

அதன்படி இணைப்பில் கண்டுள்ள இரு படிவங்களில்பள்ளிகளில் பெற்று பூர்த்தி செய்து Excel Format -ல் F-பிரிவின் fsectioncose23@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு 20-11-2023 தேதிக்குள் அனுப்பிட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவம் 1-ல் நிரப்பபட்ட (fled post) தலைமை ஆசிரியர். மற்றும் அலுவலக பணியாளர்களின் எண்ணிக்கைக்கு மாறாமல் படிவம் 2-ல் உள்ள கலங்களுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களின் விவரங்கள் தவறாமல் பூர்த்தி செய்தல் வேண்டும்.தரவுகளில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில் சார்ந்த அலுவலரே பொறுப்பாவார் எனவும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு:

படிவம் 1 மற்றும் 2. (Excel Format) CLICK HERE TO DOWNLOAD DSE செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.