ஆசிரியர்களுக்கு இரண்டுநாள் (19.10.2023 மற்றும் 20.10.2023 ) உயர்கல்வி வழிக்காட்டி பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 18, 2023

ஆசிரியர்களுக்கு இரண்டுநாள் (19.10.2023 மற்றும் 20.10.2023 ) உயர்கல்வி வழிக்காட்டி பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - PDF



Two Day (19.10.2023 and 20.10.2023) Higher Education Guide Training for Teachers - State Program Director's Proceedings - PDF - ஆசிரியர்களுக்கு இரண்டுநாள் (19.10.2023 மற்றும் 20.10.2023 ) உயர்கல்வி வழிக்காட்டி பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - PDF

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, தமிழ்நாடு மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் பிறப்பிப்பவர்:டாக்டர் மா.ஆர்த்தி, இ,ஆய,

நக.எண்: 3561/அ7/SoE/ஒபக/2023,

நாள்:16.10.2023

பொருள்:

2023-24 - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - நான் முதல்வன் - அனைத்து தகைசால் பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இரண்டுநாள்

உயர்கல்வி வழிக்காட்டி பயிற்சி அளித்தல் தொடர்பாக - பார்வை: அரசாணை நிலை எண்.206, பள்ளிக் கல்வித் (SSA1) துறை, நாள்: 21.11.2022.

மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தி, அவர்கள் கற்றலில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 28 அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது. அப்பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி மற்றும் இணை பாடத்திட்ட உள்ளீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு 28 தகைசால் பள்ளிகள் 2023-24ஆம் கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகின்றது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 28 தகைசால் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நடப்பு கல்வியாண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, அனைத்து தகைசால் பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் உயர்கல்வி வழிக்காட்டி பயிற்சி முதற்கட்டமாக 19.10.2023 மற்றும் 20.10.2023 ஆகிய நாட்களில் கீழ்க்காணும் முகவரியில் காலை 09:30 மணி முதல் மாலை 05:30 மணி வரை நடைபெற உள்ளது CLICK HERE TO DOWNLOAD SPD Proc PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.