TNSED Attendance முக்கிய தகவல் - 03.10.2023 முதல் 06.10.2023 வரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 2, 2023

TNSED Attendance முக்கிய தகவல் - 03.10.2023 முதல் 06.10.2023 வரை



TNSED Attendance முக்கிய தகவல் - 03.10.2023 முதல் 06.10.2023 வரை

தொடக்க நடுநிலைப் பள்ளிகள் மட்டும்

தொடக்கப் பள்ளிகள்

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் *Fully Not working* என பதிவு செய்து பள்ளிக்கு வருகை புரியும் ஆசிரியர்களுக்கு *Present* எனவும் பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு *Training* எனவும் பதிவு செய்ய வேண்டும் 2நடுநிலைப் பள்ளிகள்

6,7,8 வகுப்புகள் வருகை புரிய உள்ளதால் *Partially working* என பதிவு செய்து 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு வருகை பதிவு செய்ய வேண்டும்

பள்ளிக்கு வருகை புரியும் *இடைநிலை ஆசிரியர்களுக்கு* *Present* எனவும் பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு *Training* எனவும் பதிவு செய்ய வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழக்கம் போல் வருகை பதிவு செய்ய வேண்டும்

Logout & Login:

தங்கள் பள்ளியில் மாணவர்கள் புதியதாக சேர்க்கை அல்லது நீக்கம் செய்யப்பட்டாலோ மறுநாள் காலை வருகைபதிவு செய்வதற்கு முன்பு TNSED Attendance செயலினை கட்டாயமாக Logout & Login செய்ய வேண்டும். தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசரியர்கள் TNSED Attendance செயலியினை தினந்தோறும் ஒருமுறையாவது Internet உடன் Connect செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வருகையினை (முற்பகல்/பிற்பகல்) என இருவேளைகளில் பதிவு செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் விடுப்பு என்றால் TNSED School செயலியில் உரிய காரணத்துடன் பதிவு செய்த பின்பே விடுப்பு வழங்க வேண்டும்.

மேற்கண்ட நடைமுறைகளை தவறாது பின்பற்றி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகளை பதிவேற்றம் செய்திட வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.