பள்ளி சார்ந்த தகவல்களை கணினியில் பதிவு செய்யும் பணிச்சுமையில் இருந்து விரைவில் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 5, 2023

பள்ளி சார்ந்த தகவல்களை கணினியில் பதிவு செய்யும் பணிச்சுமையில் இருந்து விரைவில் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு!



பள்ளி சார்ந்த தகவல்களை கணினியில் பதிவு செய்யும் பணிச்சுமையில் இருந்து விரைவில் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி சார்ந்த தகவல்களை தினமும் கணினியில் பதிவு செய்யும் பணியில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுவார்கள்என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். சென்னையில் கலைவாணர் அரங்கில், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி, ஆகியோர் பங்கேற்று 390 ஆசிரியர்களுக்கு ‘முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்’ பெயரிலான விருதுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:

பெற்றோருக்கு அடுத்த நிலையில் நாம் யாரை வைத்துப் போற்ற வேண்டும் என்றால் அது ஆசிரியர்கள்தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியாக தெரிவித்துள்ளார். அரசு திட்டங்கள் அனைத்தும் இந்தியாவே பாராட்டும் அளவுக்கு இருப்பதற்கு காரணம் ஆசிரியர்கள் தான். அதனால் முதல்வர் உங்களுக்கு உயர்ந்த இடத்தை அளித்துள்ளார்.

2 வருடமாக ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதில், 5 கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். குறிப்பாக எமிஸ்(EMIS) என்னும் கணினியில் விவரங்கள் பதியும் பணியில் இருந்து விரைவில் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள். அதற்கு பிறகு வெறும் வருகைப்பதிவேடு மட்டும் பராமரித்தால் போதும் என்றார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், விருதுபெற்ற ஆசிரியர்களை வாழ்த்திப் பேசியதாவது: இன்று விருது பெறும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்தும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களைப் போன்றவர்களை படிக்க வைத்து ஆளாக்கிய பெருமை உங்களைப் போன்ற ஆசிரியர்களையே சேரும். நான் படித்த பள்ளிக்கு சென்று பார்த்த போது, பள்ளி முன்புபோல பெரியதாக இல்லை என்ற உணர்வு தோன்றியது.

மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் போவார்கள், படிப்பார்கள் வளர்வார்கள். ஆனால் பள்ளியும் ஆசிரியரும் அங்கேயே இருப்பார்கள். பள்ளிகள் உங்களுக்கு பெருமை சேர்க்கும் இடமாகவே இருக்கின்றன. உங்களுக்கு கிடைத்துள்ள நல்ல அமைச்சர்; 35 ஆயிரம் பள்ளிகளையும் சிறப்பாக நடத்தி வருகிறார். அதற்கு ஒத்துழைக்கும் உங்கள் பணி ெதாடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.