காலாண்டுத் தேர்வு விடுமுறையை 05.10.2023 வரை நீட்டிக்க ஆசிரியர்கள் கோரிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 29, 2023

காலாண்டுத் தேர்வு விடுமுறையை 05.10.2023 வரை நீட்டிக்க ஆசிரியர்கள் கோரிக்கை!



உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், பணியாற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கும் காலாண்டுத் தேர்வு விடுமுறையை 28.09.2023 முதல் 02.10.2023 வரை என்பதை 28.09.2023 முதல் 05.10.2023 வரை என்று மாற்றி வழங்கிட - ஆவன செய்யுமாறு வேண்டுதல் சார்ந்து.

காலாண்டு விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்கள் பள்ளித் தொடர்பான பலப்பணிகளையும், மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தி - மதிப்பெண்கள் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ளவேண்டி இருப்பதால் - இந்த 5 நாட்கள் விடுமுறை போதுமானதாக இல்லை. ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு விடுமுறை குறைந்தபட்சம் 9 நாட்கள் வழங்கப்படும்.

இந்த ஆண்டு வெறுமனே 5 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையாக அளிக்கப்படுகிறது.

இந்த 5 நாட்களில் - 4 நாட்கள் எல்லொருக்கும் உரிய அரசு விடுமுறை நாட்களாகும். இந்த அடிப்படையில் பார்த்தால் ஒரே ஒரு நாள் (அதாவது 29.09.2023 மட்டும் தான் காலாண்டுத் தேர்வு விடுமுறையாக அளிக்கப்படுகிறது. ஆகவே அருள்கூர்ந்து காலாண்டு தேர்வு விடுமுறையை வழக்கம்போல் 9 நாட்களாக மாற்றி 28.09.2023 முதல் 05.10.2023 வரை காலாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் என்றும், மீண்டும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 06.10.2023 அன்று வழக்கம்போல் திறக்கப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.