இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 1, 2023

இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2021-22ஆம் ஆண்டு வரை விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள். சென்னை-06. ந.க.எண்.48848/கே/இ2/2023, நாள் 16.09.2023.

பொருள்

பள்ளிக்கல்வி - 2011-2012 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 10.11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளமை - 2011-2012 ஆம் ஆண்டுமுதல் 2021-2022 ஆம் ஆண்டு முடிய தங்களது மாவட்டங்களில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படாமல் விடுபட்டுள்ள மாணவர்களின் விவரங்கள் கோருதல் - சார்பாக.

அரசாணை (நிலை) எண் 141. பள்ளிக்கல்வி (இ1)த் துறை, நாள் 13.09.2011.

பார்வை

பார்வையில் காணும் அரசாணையின்மீது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் உடனடி கவனம் ஈர்க்கப்படுகிறது.

அரசு மற்றும் அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் (சுயநிதிப் பாடப் பிரிவு நீங்கலாக) 10. 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது படிப்பினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து பயின்றிட ஊக்கம் அளிக்கும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் பார்வையில் காணும் அரசாணையின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நேர்வில் 2011-2012 ஆம் கல்வி ஆண்டு முதல் 2021-2022 ஆம் ஆண்டு வரை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம் மற்றும் EMIS மூலமாக பெறப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களின்படி 10. 11 மற்றும் 12 ஆம் வகுப்பினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையான ரூபாய் 5000 மற்றும் அதற்கான வட்டித்தொகை TNPFC-ன் மூலமாக மாணவர்களின் வங்கிக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. வரவு

மேற்கண்ட திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடவும், 12 ஆம் வகுப்பு முடித்த தகுதியான அனைத்து மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையினை வழங்கிடவும் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை கீழ்கண்ட விவரங்களின்படி ஆண்டுவாரியாக தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிதி நிறுவன மேலாளரின் வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட அளவில் தேர்வு செய்து பரிந்துரை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பு ஊக்கத் தொகையான ரூபாய் 5000 மற்றும் வட்டித் தொகை முழுமையான அளவில் TNPFC- மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், விடுபட்டுள்ள மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையினை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பல மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக் கல்வி இயக்குநரிடம் கடிதங்கள் வாயிலாகஅறியப்படுகிறது.

எனவே, 2011-12 ஆம் ஆண்டுமுதல் 2021-2022 ஆம் ஆண்டு வரை சிறப்பு ஊக்கத் தொகை பெற தங்களது மாவட்டங்களில் தேர்வு செய்து பரிந்துரை செய்யப்பட்ட மொத்த மாணவர்களில், நாளது தேதி வரை சிறப்பு ஊக்கத் தொகை பெறப்படாமல் உள்ள மாணவர்கள் இருப்பின் அவர்களது விவரங்களினை இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து (குறுந்தகடுடன்) பள்ளிக் கல்வி இயக்குநரகத்திற்கு 30.09.2023-க்குள் அணுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு- படிவம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.