பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 01.09.2023 அன்று 100 சதவீதம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வருகை . உரிய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் சார்பு - CEO PROCEEDINGS - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 26, 2023

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 01.09.2023 அன்று 100 சதவீதம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வருகை . உரிய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் சார்பு - CEO PROCEEDINGS

நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் (ஒபக) செயல்முறை ஆணை

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - நாமக்கல் மாவட்டம் - பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 01.09.2023 அன்று 100 சதவீதம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வருகை . உரிய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் பார்வையில் கண்டுள்ள செயல்முறைகளின்படி, பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டமானது அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 01.09.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற கூட்டத்தில் 100% உறுப்பினர் வருகையை கூட்ட அழைப்பாளர் உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் 100% வருகையை உறுதி செய்யும் பள்ளித்தலைமையாசிரியர்களை மாவட்ட அளவில் அம்மாதத்தின் சிறந்த தலைமையாசிரியராக அறிவித்து முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகப் பாராட்டுக் கடிதம் அனுப்பிட வேண்டும் என்றும் பார்வை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:

இணைப்புப் பட்டியலில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் மதியம் 2.30 மணிக்கு கலந்து கொள்ளுமாறு சேட்டுச் கொள்ளப்படுகிறார்கள்.

SMC Members 100% Present at SMC Meeting held on 01.09.2023 School

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.