பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்துக்கு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 16, 2023

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்துக்கு!



நடைபெற்ற ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 18.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கியது.

இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். தமிழக பள்ளிக்கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ல் தொடங்கி ஏப்.3-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல, மார்ச் 14-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வும் ஏப்.5ம் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6ம் தேதி தொடங்கி ஏப்.20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல்நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.

இதில் 37,798 தனித்தேர்வர்கள், 13,151 மாற்றுத் திறனாளிகள், 5 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 2,640 சிறை கைதிகள் அடங்குவர்.

பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 55,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முறைகேடுகளை தடுக்க 4,235 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும்.

மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 19-ம் தேதி வெளியிடப்பட்டன.

அதன்படி, இந்த பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொது தேர்வில் 94.66% மாணவிகளும், 88.16% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் மூலம் மாணவர்களை விட மாணவிகள் 6.5% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் தோல்வி அடைந்து மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், மற்றும் தனித்தேர்வர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை 18ம் தேதி அன்று காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என்றும் தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வர்கள் இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.