கலைஞர் Rs.1,000 மகளிர் உரிமைத் திட்டம் - இரண்டாம் கட்ட முகாம்களுக்கான நாட்கள் மாற்றியமைத்து உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 12, 2023

கலைஞர் Rs.1,000 மகளிர் உரிமைத் திட்டம் - இரண்டாம் கட்ட முகாம்களுக்கான நாட்கள் மாற்றியமைத்து உத்தரவு



கலைஞர் Rs.1,000 மகளிர் உரிமைத் திட்டம் - இரண்டாம் கட்ட முகாம்களுக்கான நாட்கள் மாற்றியமைத்து உத்தரவு

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை - கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - சிறப்பு முகாம்கள் - இரண்டாம் கட்ட முகாம்களுக்கான நாட்கள் மாற்றியமைத்தல் - தொடர்பாக

பார்வை இரண்டில் காணும் செய்தி வெளியீட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட முகாம்கள் 05.08.2023 அன்று தொடங்கி 16.08.2023 வரை நடைபெற கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

15.08,2023 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதால், இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் பொருட்டு, இரண்டாம் கட்ட முகாம்களின் இறுதி இரண்டு நாட்கள் (15.08.2023, 16.08.2023) நடைபெறும் விடுபட்டவர்களுக்கான விண்ணப்பதிவு செய்யும் நிகழ்வை 19.08.2023 மற்றும் 20.08.2023 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களோடு இணைத்து செயல்படுத்த தெரிவிக்கப்படுகிறது. 2. விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களை முதல் கட்ட விண்ணப்ப பதிவு நடைபெற்ற இடங்கள் மற்றும் இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு நடைபெறும் இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் நடத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் இதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.