JACTTO-GEO - Subjectக்கு முழிப்பு வந்துருச்சு But. . . . .!!! - செல்வ.ரஞ்சித் குமார்... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 18, 2023

JACTTO-GEO - Subjectக்கு முழிப்பு வந்துருச்சு But. . . . .!!! - செல்வ.ரஞ்சித் குமார்...



Subjectக்கு முழிப்பு வந்துருச்சு But. . . . .!!!

செல்வ.ரஞ்சித் குமார்


08.04.2023 அன்று அதாவது 128 நாள்களுக்கு முன்னர் மூன்று அமைச்சர்கள் குழுவுடன் நடைபெற்ற நம்பிக்கை !!! பேச்சுவார்த்தையால் எந்தவொரு கோரிக்கையும் நிறைவேறவில்லை என்பதைக் கண்டுபிடித்த JACTTO-GEO, இன்று (17.08.2023) சென்னையில் கூடி மீண்டும் ஆலோசித்துள்ளது.
ஆலோசிச்சு. . . .
ஆலோசிச்சு. . . .
ஆலோசிச்சு. . . .
ஆலோசிச்சு. . . .
ஆலோசிச்சு. . . .
ஆலோசிச்சு. . . .
ஆலோசிச்சு. . . .
ஆலோசிச்சு. . . .
ஆலோசிச்சு. . . .
ஆலோசிச்சு. . . .
ஆலோசிச்சு. . . .
திரும்பவும் அதே 3 அமைச்சர்களையும் சந்திச்சு கோரிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று முதலமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தற்போதைய முதலமைச்சரிடம் இருமுறை நேரில் சந்தித்து கோரிக்கைக் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஒருமுறை முதலமைச்சரையே அழைத்து வந்து நம்பிக்கை மாநாடும் நடத்தப்பட்டுவிட்டது.

கடந்த 128 நாள்களில்,
ஜாக்டோ-ஜியோ-வில் உள்ள உறுப்பு சங்கங்கள் TETOJAC, TNSE-JACTTO, TN-JACTTO என்று தனித்தனியாகப் பிரிந்து JACTTO-GEOவின் பிரதான கோரிக்கைகள் குறித்தும் தனித்தனியே போராட்ட அறிவிப்புகள் வெளியிட்டும், நேரடியாக அமைச்சர் & அதிகாரிகளை பலமுறை சந்தித்துப் பேசியும் கோரிக்கைகளை விளக்கியாயிற்று.

திமுக-வின் ஆசிரியர் பிரிவு சங்கங்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை அழைத்து மாநாடுகள் நடத்தியாயிற்று. திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் அழைத்து மாநாடு நடத்தியாயிற்று.

இவை எல்லாம் நடைபெற்றும் ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் எள் முனையளவுகூட நிவர்த்தியானபாடில்லை.

இதையெல்லாம் 128 நாள்களாகப் பார்த்து வந்த - இவற்றில் பங்கெடுத்து வந்த சங்கப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய JACTTO-GEO மீண்டுமாக 3 அமைச்சர்களையும் சந்தித்து முறையிடப்போவதாக அறிவித்துள்ளது.

அடுத்தகட்டமாக 09.09.2023 அன்று கள்ளக்குறிச்சியில் மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக & அஇஅதிமுக ஆட்சிக் காலங்களில் ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக வலுவாகப் போராடிய சங்கங்கள் எல்லாம் தற்போதைய திமுக ஆட்சியில் உறுதியான எந்தவொரு போராட்டத்தையும் நடத்தவில்லை.

எப்படியும் திரு.மு.க.ஸ்டாலின் செய்து தந்துவிடுவார் என்று நம்பிக்கை வைத்து. . . நம்பிக்கை வைத்தே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த காலங்கடத்தலால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பெரும்பான்மையாக இந்த ஆட்சியின் மீதும் சங்கங்களின் மீதும் நம்பிக்கை அற்றுப்போனவர்களாக உள்ளனர்.

இந்த நம்பிக்கை இழப்பு என்பது மக்களாட்சியிலும் வலுவான எதிர்மறைத் தாக்கத்தை 100% ஏற்படுத்தக் கூடியது என்பதை மாநில புலனாய்வுத்துறை ஆளும் தரப்பிடம் எடுத்துச் சொல்கிறதோ இல்லையோ, திமுகவின் சங்கப் பொறுப்பாளர்களும், அதன் கூட்டணிக் கட்சிகளின் சங்கப் பொறுப்பாளர்களும் ஆட்சியாளர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தைக் காலம் நெருக்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அவர்களோ. . .😟😔😞

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.