பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி கட்டாயமில்லை அரசு கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 3, 2023

பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி கட்டாயமில்லை அரசு கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!



பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி கட்டாயமில்லை அரசு கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்! - Govt should declare TET pass not mandatory for promotion as govt policy decision - teachers union request!

பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமில்லை, என அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும், என இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் பதவி உயர்வுக்கான கல்வித்தகுதியுடைய ஆசிரியர்கள் பணிமூப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு ஜனவரி முதல் நாளை அடிப்படையாகக்கொண்டு தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டு பட்டதாரி ஆசிரியர், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பதவி உயர்வினை பெற தற்போது ஆசிரியர் பணியில் உள்ளோர் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற வேண்டும், என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இதுவரை பணி மூப்பு அடிப்படையில் தேர்ந்தோர் பட்டியல் வெளியிட்டு அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலை இருந்து வந்தது.அதிலும் உயர், மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் தேர்ந்தோர் பட்டியல் 3 ஆண்டுகளாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. தொடர்ச்சியாக கோரிக்கை மனு அளித்தும் வெகு விரைவில் நடத்துவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.

2003 க்குப்பின் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் என்பது கிடையாது. அந்த தேதியிலிருந்து விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு வழங்கியிருந்தால் இன்றளவில் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வில் சென்றிருப்பார்கள். ஆனால் 7 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.பதவி உயர்வுக்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் இல்லை, என அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.