பிளஸ் 1 முடிவுகள் | பாடவாரியாக தேர்ச்சி விகிதம் - கணினி அறிவியலில் உச்சம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 19, 2023

பிளஸ் 1 முடிவுகள் | பாடவாரியாக தேர்ச்சி விகிதம் - கணினி அறிவியலில் உச்சம்

பிளஸ் 1 முடிவுகள் | பாடவாரியாக தேர்ச்சி விகிதம் - கணினி அறிவியலில் உச்சம்

சென்னை: தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.25 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியிடப்பட்டன.

மொத்தம் தேர்வு எழுதிய 7,76,844 மாணவ, மாணவியர்களில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.93. இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 3,91,968. மாணவர்களின் எண்ணிக்கை 3,14,444. மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.36. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.99. மாணவர்களை விட மாணவியர்கள் 7.37 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.25 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்தில் 95.37 சதவீத பேரும், வேதியியல் பாடத்தில் 96.74 சதவீத பேரும், உயிரியல் பாடத்தில் 96.62 சதவீத பேரும், கணிதப் பாடத்தில் 96.01 சதவீத பேரும், தாவரவியல் பாடத்தில் 95.30 சதவீத பேரும், விலங்கியல் பாடத்தில் 95.27 சதவீத பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 99.25 சதவீத பேரும், வணிகவியல் பாடத்தில் 94.33 சதவீத பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 94.97 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அறிவியல் பாடப் பிரிவுகளில் 93.38 சதவீத பேரும், வணிகவியல் பாடப் பிரிவுகளில் 88.08 சதவீத பேரும், கலைப் பிரிவுகளில் 73.59 சதவீத பேரும், தொழிற்பாடப் பிரிவுகளில் 81.60 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100/100 மதிப்பெண்

100-க்கு 100 மதிப்பெண்*

*✍️11ம் வகுப்பு தேர்வில் 3,606 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.*

*✒️தமிழ்- 9,*

*✒️ஆங்கிலம் -13,*

*✒️இயற்பியல் - 440,*

*✒️வேதியியல் - 107,*

*✒️உயிரியல் - 65,*

*✒️கணிதம் - 17,*

*✒️தாவரவியல் -2,*

*✒️விலங்கியல் -34,*

*✒️கணினி அறிவியல் -940,*

*✒️வணிகவியல் - 214,*

*✒️கணக்குப் பதிவியல் - 995,*

*✒️பொருளியியல் 40,*

*✒️கணினிப் பயன்பாடுகள் - 598,*

*✒️வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 132 பேர் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர்.*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.