பிளஸ்1, பிளஸ் 2 தேர்வில் தோல்வி - கடந்த 2 நாட்களில் 9 மாணவர்கள் தற்கொலை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 29, 2023

பிளஸ்1, பிளஸ் 2 தேர்வில் தோல்வி - கடந்த 2 நாட்களில் 9 மாணவர்கள் தற்கொலை!



ஆந்திராவில் 48 மணி நேரத்தில் 9 மாணவர்கள் தற்கொலை.

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பிளஸ்1, பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததால், கடந்த 2 நாட்களில் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.

10 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் பிளஸ் 1 ல் 61 சதவீதம் பேரும், பிளஸ் 2 தேர்வில் 72 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். இதனால்,கடந்த 2 நாட்களில், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் 9 பேர் ஆந்திராவில் பல மாவட்டங்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஓரிருவர் ரயில் முன் பாய்ந்தும், சிலர் வீட்டிலேயே விஷம் குடித்தும், தூக்கு போட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

விசாகபட்டினம், ஸ்ரீகாகுளம், சித்தூர், அனகாபள்ளி மாவட்டங்களில் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் 2 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.