SSC தேர்வுக்கு இலவச பயிற்சி: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஏற்பாடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 14 أبريل 2023

SSC தேர்வுக்கு இலவச பயிற்சி: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஏற்பாடு



மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு - 2023 -ல் தமிழ்நாட்டில் உள்ள போட்டித் தேர்வர்கள் கலந்துகொள்ளலாம் - [Press Release No : 699 ] From the Commissioner, Employment and Training Department

சென்னை: எஸ்எஸ்சி தேர்வுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் இலவசப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-பி. குரூப்-சி பதவிகளில் 7,500 காலியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. பட்டப் படிப்பு தரத்திலான இத்தேர்வுக்கு மே 3-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.ssc.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுக்கு அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன.

மேலும், தேர்வுக்கான பாடத்திட்டம், பாடக்குறிப்புகள் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்திலும் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் "AIM TN" என்ற யூடியூப் சேனலிலும் இத்தேர்வுக்கான காணொலிகளை கண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.