தலைமையாசிரியர் மீது தாளாளர் தாக்குதல் தேனி பள்ளிக்கு சீல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 14 أبريل 2023

தலைமையாசிரியர் மீது தாளாளர் தாக்குதல் தேனி பள்ளிக்கு சீல்

தலைமையாசிரியர் மீது தாளாளர் தாக்குதல் தேனி பள்ளிக்கு சீல் - Theni School Sealed for Assault on Headmaster

தேனியில் தலைமையாசிரியரை தாக்கியதோடு, பள்ளியை விட்டு மாணவ, மாணவியரை தாளாளர் வெளியேற்றிய, சம்பவம் தொடர்பாக அந்த பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.

தேனி, சுப்பன் தெருவில் பகுதியில் அரசு உதவி பெறும் மஹாராஜா தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தாளாளர் அன்பழகன் (55). தலைமையாசிரியர் சென்றாயபெருமாள், ஒரு ஆசிரியை உள்ளனர். 31 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தாளாளர், தலைமையாசிரியருக்கு இடையே பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

கடந்த 11ம் தேதி மதியம் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியர் சென்றாயபெருமாளுடன் தகராறில் ஈடுபட்டு, சரமாரியாக தாக்கினார். பின்னர் மாணவ, மாணவிகளை வெளியேற்றி பள்ளியை பூட்டிச் சென்றார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. புகாரின்பேரில் போலீசார், அன்பழகன் மீது முன்ஜாமீன் கிடைக்காத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள தாளாளரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி கலெக்டர் ஷஜீவனா உத்தரவுப்படி நேற்று பள்ளிக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.