State Education Policy - Letter seeking time to prepare draft report - மாநில கல்விக் கொள்கை - வரைவு அறிக்கை தயாரிக்க அவகாசம் கோரி கடிதம்
சென்னை: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க, முன்னாள் நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு சார்பில் ஜூன் மாதத்துக்குள் வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அறிக்கை தயாரிப்பு பணி இன்னும் முடியாததால், குழு சார்பில் 3 மாதங்கள் கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த மாநில கல்விக் கொள்கை குழு ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கை கடிதம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பணியை முடித்து அரசிடம் செப்டம்பரில் வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.