பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 3 سبتمبر 2025

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு: இன்றுமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் கடந்த மாா்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் புதன்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் கடந்த மாா்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் புதன்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு மே 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடா்ந்து மாணவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 19-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டன. இருப்பினும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தோ்வா்கள் தங்கள் தோ்வு மையங்களிலும் புதன்கிழமை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.


10ஆம் பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் 03.09.2025 ( புதன்கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் வழங்கப்படும் - DGE அறிவிப்பு.

மார்ச் / ஏப்ரல் -2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் 03.09.2025 ( புதன்கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் வழங்கப்படும் . பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும் , தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் .

செப்.3 முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 16-ம் தேதி வெளி யிடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 19-ம் தேதி முதல் வழங் கப்பட்டன. எனினும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வு மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.