25 சதவீத இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 17, 2023

25 சதவீத இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்



25 சதவீத இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்



சென்னை: தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினருக்கு 25 %இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இந்த இடஒதுக்கீட்டில் எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு சேரஏப்ரல் 20 முதல் மே 18-ம் தேதி வரை ஆன்லைனில் (rte.tnschools.gov.in) விண்ணப்பிக்கலாம். எல்கேஜி-க்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2019 முதல் 31.7.2020-க்குள்ளாகவும், ஒன்றாம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2017 முதல் 31.7.2018-க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பத்தில் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருப்பதற்கான சான்றிதழ், இருப்பிடச்சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர் ஆன்லைனில் எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அலுவலர், எஸ்எஸ்ஏ வட்டார வள மைய அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.