மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் 2023- விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள் - இணையதளம் மூலம் பதியிறக்கம் செய்யக் கோருதல் அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 2, 2023

மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் 2023- விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள் - இணையதளம் மூலம் பதியிறக்கம் செய்யக் கோருதல் அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக - அரசுத் தேர்வுகள் இயக்ககம்



அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6- மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் 2023- விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள் - இணையதளம் மூலம் பதியிறக்கம் செய்யக் கோருதல் அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக, SECONDARY FIRST AND SECOND YEAR PUBLIC EXAMINATION MARCH/APRIL 2023- MISSING / NO BARCODE / DAMAGED PAGE PAPERS - REQUESTED TO DOWNLOAD THROUGH WEBSITE ISSUING INSTRUCTIONS - REGARDING - DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS

நடைபெறவிருக்கும் மார்ச் 2023 மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்குரிய முகப்புத் தாட்கள் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கும் அனுப்பபட்டு, முகப்புத்தாட்களை சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வழங்கி, முதன்மை விடைத்தாட்களுடன் முகப்புத்தாட்களை இணைத்து தைக்கும் பணியினை மேற்கொள்ள தேர்வு மையத் தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் தங்கள் மையத்தில் தேர்வெழுதும் அனைத்துத் தேர்வர்களுக்கும் தேர்வெழுதும் அனைத்து பாடங்களுக்கான முகப்புத் தாட்கள் பெறப்பட்டுள்ளளவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முகப்புத்தாட்கள் கிடைக்கப் பெறாத, சேதமடைந்த (Barcode - Reg.No. overlapped, bar code smudged), பாடத் தொகுப்பு எண் மாற்றம் உள்ள முகப்புத்தாட்களை தேர்வு மையத்திற்கென வழங்கப்பட்டுள்ள User ID Password கொண்டு இணையதளம் மூலம் 08.03.2023 அன்று முதல் அந்தந்த தேர்வு மையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முகப்புத்தாட்கள் பெறப்படயில்லை / சேதமடைந்திருந்தல் / பார்கோடு இல்லாதிருத்தல் (Barcode Missing / Bar Code Damage) / பாடத் தொகுப்பு எண் மாற்றம் ஆகிய காரணங்களுக்காக மட்டுமே முகப்புத்தாட்கள் பதியிறக்கம் செய்திட வேண்டும் என்பதை அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் / முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு வலியுறுத்தி தெரிவிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி தேர்வு மையத் தலைமை ஆசிரியர்களை நேரிடையாக தொடர்பு கொண்டு மேற்படி விவரங்களை பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தனித்தேர்வர்கள் மற்றும் பள்ளி மாணவர்களில் முதலாமாண்டு தோல்வியுற்ற பாடங்களுக்கான (Except Direct Private Candidates) முகப்புத்தாட்களை மஞ்சள் நிறத்தாளில் பட்டுமே அச்சழுத்தம் செய்ய வேண்டும் என்பதையும் அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் / முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு வலியுறுத்தி தெரிவிக்க வேண்டும்

பெயர் பட்டியலில் சரியான பதிவுகள் இருந்து, தேர்வு மையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட முகப்புத்தாட்களில் கீழ்க்குறிப்பிட்டுள்ள திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் பின்வரும் வழிமுறைகளின்படி செயல்பட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. தேர்வரின் பெயர் (Candidate's Name)
2. பயிற்று மொழி (Medium)
3. புகைப்படம் மாறியிருத்தல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.