ஒன்றியத்திற்கு ஒன்றியம் அலுவலக பணியாளர்களைப் பொறுத்து மாறுபடும் EL கணக்கீடு தொடர்பான பதிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 22, 2023

ஒன்றியத்திற்கு ஒன்றியம் அலுவலக பணியாளர்களைப் பொறுத்து மாறுபடும் EL கணக்கீடு தொடர்பான பதிவு

ஒன்றியத்திற்கு ஒன்றியம் அலுவலக பணியாளர்களைப் பொறுத்து மாறுபடும் EL கணக்கீடு தொடர்பான பதிவு:

தலைக்கு ஒரு சீகற்காய்..., தாடிக்கு ஒரு சீகற்காய் என்பது போல...

ஓராண்டின் பணிநாட்களை 21.47 ஆல் வகுக்க கிடைக்கும் நாட்கள் EL நாட்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது..

உதாரணமாக:

ஒருவர், ஓராண்டு பணிகாலத்திற்குள் 10 நாட்கள் ML எடுத்திருந்தால்,

365 நாட்களில் 10 நாட்களை கழித்து, மீதமுள்ள 355 நாட்களை 21.47 ஆல் வகுத்து EL நாட்களை கணக்கிடுவர்..

355÷21.47= 16.53

16.53-ல் 16 நாட்கள் நடப்பு ஆண்டின் EL நாட்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்..

தசமத்தில் உள்ள 0.53 -ஐ 21.47-ஆல் பெருக்கி வரும் 11 நாட்களை மீதமுள்ளபணிநாட்கள் கணக்கில் வரவு வைத்துக்கொள்வர்..

(0.53×21.47=11.47)

அடுத்த வருடம் EL கணக்கிடும் பொழுது சென்ற வருடம் கணக்கில் மீதமிருந்த 11 நாட்களுடன் , 365 நாட்களையும் கூட்டி 376 பணிநாட்களுக்கு EL கணக்கிடுவர்.

ஆனால், சிலர் இந்த முறையில் கணக்கிடாமல்,

மீதமுள்ள பணிநாட்களை வரவு வைக்காமல் போவதால் பல நாட்கள் EL குறைகிறது..

நாம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்த பொழுது, அவர்களும் மீதமுள்ள பணிநாட்களை, அடுத்த வருடம் கணக்கில் எடுத்துக்கொள்வதாகவே கூறுகின்றனர்..

ஆளுக்கொரு நடைமுறையை பின்பற்றினால் என்ன செய்வது..?

பணிப்பதிவேட்டில் பக்கம் எண் 30-ல்

ஈட்டிய விடுப்பு கணக்குக்கான அட்டவணையில் மீதம் உள்ள பணி நாட்கள் (5) என்ற பிரிவு தெளிவாக, தனியே கொடுக்கப்பட்டும், அந்த மீதமுள்ள பணிநாட்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடுவதால்..!!!

ஒருவரின் பணிக்காலம் முழுவதும் இதுபோல் வீணாகும் பணிநாட்களுக்கான EL-ஐ கணக்கிட்டால் பல நாட்கள் இருக்கும்..

தோழமையும்

தேவராஜன்,

தஞ்சாவூர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.