உதவி பிரிவு அலுவலர் பதவிக்கு சான்று சரிபார்ப்பு - Verification of Evidence for the post of Assistant Divisional Officer - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 29, 2022

உதவி பிரிவு அலுவலர் பதவிக்கு சான்று சரிபார்ப்பு - Verification of Evidence for the post of Assistant Divisional Officer

TNPSC Secretary Uma Maheshwari said that the third round of certificate verification and counseling for the post of Assistant Divisional Officer in the Tamil Development and Information Department will be held on the 6th. Tamil Nadu Public Service Selection Commission (TNPSC) Secretary B. Uma Maheshwari announced yesterday: The third phase of original certificate verification and consultation regarding the post of Assistant Section Officer (Translation) in the Tamil Development and Information Department announced by the Selection Board will be held on the 6th at the Tamil Nadu Public Service Selection Board office.

Candidates should bring the educational proof and all the original certificates requested in their online application in person. The 'call letter' containing the date, time and details of certificate verification and interview of those invited for the third stage of original certificate verification and interview can be downloaded from the Election Commission website. The interview invitation will not be sent separately to the candidates. Candidates will not be given a second chance if they do not appear for original verification and interview on their due date.

Candidates called for counseling will be informed about the same through SMS and email. It says so.

தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர் பதவிக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வருகிற 6ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் பி.உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர்(மொழி பெயர்ப்பு) பதவி தொடர்பான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 6ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரிய கல்வி சான்று மற்றும் அனைத்து மூலச்சான்றிதழ்களையும் நேரில் கொண்டு வர வேண்டும். மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய ‘அழைப்புக்கடிதத்தினை’தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே அனுப்பப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அவர்களுக்கு உரிய நாளில் வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.

கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.