2023ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது TNPSC - TNPSC - Annual Recruitment Planner 2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 15, 2022

2023ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது TNPSC - TNPSC - Annual Recruitment Planner 2023

அடுத்த ஆண்டு குரூப் 4 தேர்வு எப்போது?: ஆண்டு திட்ட அறிக்கையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வு உள்பட அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள போட்டித் தேர்வு களுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்ட ஆண்டுத் திட்ட அறிக்கை விவ ரம்: மீன்வளத் துறை சார்-ஆய் வாளர் பதவிக்கான காலிப் பணி யிடங்களுக்குஏற்கெனவேகடந்த செப்டம்பரில் அறிவிக்கை வெளி யிடப்பட்டது. எழுத்துத் தேர்வு வரும் ஜன. 29-இல் நடக்கிறது. மக்கள் நல்வாழ்வுத் துறையில் சுகாதார அலுவலர் பதவிக்கான காலியிடங்களை நிரப்ப ஏற்கெ னவே தேர்வு அறிவிக்கை வெளி யிடப்பட்டு, அடுத்த ஆண்டு பிப். 13-இல் எழுத்துத் தேர்வு நடத்தப் படவுள்ளது.

குரூப் 2 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவ டைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு பிப்.25-இல் முதன்மைத் தேர்வு நடத்தப்படவுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரி காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை இந்த மாதம் வெளி யிடப்பட்டு, எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஏப்.9-இல் நடத் தப்படும். அதிக காலிப் பணியி டங்களைக் கொண்டு நடத்தப் படும் குரூப் 4 தேர்வுக்கான அறி விக்கை அடுத்த ஆண்டு நவம் பரில் வெளியிடப்பட்டு 2024- ஆம் ஆண்டு பிப்ரவரியில் எழுத் துத் தேர்வு நடத்தப்படும். ஒருங் கிணைந்த பொறியாளர் பணி களுக்கான காலியிடங்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்ப ரில் தேர்வு அறிவிக்கை வெளி யிடப்பட்டு, டிசம்பரில் எழுத் துத் தேர்வு நடத்தப்படும்

TNPSC - Annual Recruitment Planner 2023

2023ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது TNPSC

TNPSC - Annual Recruitment Planner 2023 - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.