வட்டார வளமைய கலந்தாலோசனைக் கூட்டம் தேதி மாற்றம் - சுற்றறிக்கை அனுப்புதல் சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 26, 2022

வட்டார வளமைய கலந்தாலோசனைக் கூட்டம் தேதி மாற்றம் - சுற்றறிக்கை அனுப்புதல் சார்பு

அக்டோபர் -- 29 -- சனி -- CRC ( தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தவிர மற்ற நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு)

நவம்பர் -- 12 -- சனி -- CRC

நவம்பர் -- 19 -- சனி -- தீபாவளி விடுமுறை ஈடு செய்யும் வேலை நாள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் சென்னை -06

ந.க.எண்.01625/ஈ2/2022. நாள். 12.10.2022

பொருள்:

சென்னை -06. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 15.10.2022 அன்று நடைபெற இருந்த வட்டார வளமைய கலந்தாலோசனைக் கூட்டம் தேதி மாற்றம் செய்யப்பட்டு 29.10.2022 அன்று நடைபெறுதல் - (6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை)-சுற்றறிக்கை அனுப்புதல் சார்பு.

பார்வை:

1. 2022-2023 ஆம் ஆண்டிற்கான பயிற்சி கால அட்டவணை.

2. மாவட்டத் திட்ட இயக்குநர் தலைமையில் நடைபெற்ற மீளாய்வு கூட்டம் நாள். 19.07.2022

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் Teacher Professional Development) 2022- 2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து 15.10.2022 அன்று கால அட்டவணைப்படி நடைபெற இருந்த வட்டாரவளமைய கலந்தாலோசனைக் (TPD) கூட்டம் வருகின்ற 29.10.2022 அன்று மாற்றப்பட்டுள்ளது. இதில் 6 முதல் 10 ஆம் வகுப்பு (1. தமிழ். 2 ஆங்கிலம், 3.கணக்கு. 4. அறிவியல், 5. சமூக அறிவியல்). 11 மற்றும் 12 ஆம் வகுப்பு (1. தமிழ், 2. ஆங்கிலம். 3.இயற்பியல். 4.வேதியியல். 5. உயிரியல், 6. கணிதவியல். 7. வரலாறு மற்றும் புவியியல். 8. பொருளியல். 9. வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல், 10. கணினி அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் என தெரிவிக்கலாகிறது.

எனவே, வருகின்ற 29.10.2022 அன்று நடைபெறவுள்ள வட்டார-வளமைய கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு மேற்குறிப்பிட்ட பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை தெரிவு செய்யப்பட்ட கலந்தாலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.