ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் சம்பளத்தில் வேலை... விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 04.09.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 1, 2022

ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் சம்பளத்தில் வேலை... விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 04.09.2022

தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் இதர விவரங்கள்: 
மொத்த காலியிடங்கள்: 02
பணி: General Manager(Technical)
சம்பளம்: மாதம் ரூ.1,23,400
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். 

பணி: Manager(Mechanical)
சம்பளம்: மாதம் ரூ.61,900
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tancem.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிட அஞ்சல் முகவரி: 
“ The Senior Manager (P&A) M/s. Tamil Nadu Cements Corporation Limited, 5th Floor, Aavin Illam, No.3A, Pasumpon Muthuramalingam Salai, Nandanam, Chennai -35”

மேலும் விவரங்கள் அறிய https://www.tancem.in/assets/careers/231314Notification%20-%20No.1%20-%20TANCEM,%20R.O%20-%202022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 04.09.2022

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.