ஜுலை மாதம் முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு! - The central government announced that the increase will be given in advance from the month of July! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 28, 2022

ஜுலை மாதம் முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு! - The central government announced that the increase will be given in advance from the month of July!

ஜுலை மாதம் முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு! - The central government announced that the increase will be given in advance from the month of July!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 01.07.2022 முதல் நிலுவையில் உள்ள அகவிலைப்படியின் கூடுதல் தவணையை விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

2022 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்ணின் 12 மாத சராசரியில் அதிகரித்த சதவீதத்தின் அடிப்படையில் 01.07.2022 முதல் நிலுவையில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியின் கூடுதல் தவணையை விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியர்களும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு தொகையை 01.07.2022 முதல் கணக்கிட்டு பெறுவார்கள்.

அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,591.36 கோடி கூடுதல் நிதி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் ரூ.4,394.24 கோடி (அதாவது 2022 ஜூலை முதல் 2023 பிப்ரவரி வரையிலான 8 மாத காலத்திற்கு) செலவாகும். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிவாரண அதிகரிப்பு காரணமாக ஆண்டுக்கு ரூ.6,261.20 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் ரூ.4,174.12 கோடி (அதாவது 2022 ஜூலை முதல் 2023 பிப்ரவரி வரையிலான 8 மாத காலத்திற்கு) செலவாகும்.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் என இரண்டுக்கும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.12,852.56 கோடி செலவாகும். 2022-23 நிதியாண்டில் ரூ.8,568.36 கோடி (அதாவது 2022 ஜூலை முதல் 2023 பிப்ரவரி வரையிலான 8 மாத காலத்திற்கு) செலவாகும்.

The Union Cabinet has approved the release of additional installments of dearness allowance due from 01.07.2022 to Central Government employees and pensioners.

Posted On: 28 SEP 2022 4:05PM by PI8 Chennai

The Union Cabinet has approved the release of additional installment of gratuity for Central Government employees and pensioners due from 01.07.2022 based on the percentage increase in the 12-month average of the All India Consumer Price Index number for the period ending June 2022.

Accordingly, the central government employees and pensioners will get the increase in dearness allowance and dearness allowance from 01.07.2022.

It is estimated that due to the increase in subsidized prices, the central government will incur an additional financial cost of Rs 6,591.36 crore per annum. 4,394.24 crore in the financial year 2022-23 (i.e. for the 8 month period from July 2022 to February 2023). 6,261.20 crore is estimated to cost Rs 6,261.20 crore per annum due to the increase in subsidy relief to pensioners. 4,174.12 crore in FY 2022-23 (i.e. for the 8 month period from July 2022 to February 2023).

The annual cost of both ex-gratia and ex-gratia is Rs 12,852.56 crore. 8,568.36 crore in FY 2022-23 (i.e. for the 8 month period from July 2022 to February 2023).

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.