B.E ஆக.1 முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 22, 2022

B.E ஆக.1 முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு!

பி.இ.: விளையாட்டுப் பிரிவுக்கு ஆக.1 முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு

பிஇ, பிடெக் பொறியியல் படிப்பு முதலாமாண்டில், விளையாட்டுப் பிரிவில் உள்ள 500 இடங்களில் சேருவதற்கு விண்ணப்பித்த 2,442 பேருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க | வகுப்பு12|வரலாறு|பாடம் 4|இரண்டாம் உலகப்போரும்காலனியநாடுகளில்அதன் தாக்கமும்

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளில் 2022-2023- ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவா்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் பொறியியல் மாணவா் சோ்க்கை குழுவால் ஜூன் 20-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 21 ஆம் தேதி மாலை 6 மணி வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா். இந்த நிலையில், விளையாட்டுப் பிரிவின் கீழ் உள்ள 500 இடங்களில் சேருவதற்கு விண்ணப்பம் செய்த 2,442 பேருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாணவா்கள் தங்களின் அசல் விளையாட்டுச் சான்றிதழ்களை நேரில் வந்து சரிபாா்த்துச் செல்ல வேண்டும்.

இதையும் படிக்க | வகுப்பு12|நெசவியல் |பாடம்15|ஜவுளிமற்றும்நாகரிகத்திற்குப்பயன்படுத்தப்படும் மென்பொருள்

இரண்டாம் கட்டமாக, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த விளையாட்டு வீரா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.