பி.எப். வட்டி விகிதம் 8.1 சதவீதமாக குறைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 3, 2022

பி.எப். வட்டி விகிதம் 8.1 சதவீதமாக குறைப்பு

It has been announced that the interest rate on provident fund, also known as PF, has been reduced to 8.1 per cent.


For those who work in organizational fields across the country, PF, on a monthly basis, is preferred. Interest will be paid annually. More than five crore people across the country, P.F., have joined the scheme.


A meeting of the Central Board of Trustees, which will determine the policy decisions of the provident fund, was held in Delhi last March. Of this, it has been decided to pay 8.1 per cent interest for 2021-2022. The interest rate has been reduced to 0.4 per cent from 8.5 per cent in the previous year.


In this context, the Federal Government has announced today that it has decided to provide 8.1 per cent interest for the year 2021-2022. The lowest interest rate was in 1977-1978, when 8 percent interest was paid. For that, the lowest interest rate after 40 years is currently set. The decision will be forwarded to the Central Government and approved by the Union Ministry of Finance and interest will be added to the subscribers' account.


பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுதும் அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றுவோருக்கு, மாத சம்பளத்தில் பி.எப்., பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு ஆண்டு தோறும் வட்டி வழங்கப்படும். நாடு முழுதும் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர், பி.எப்., திட்டத்தில் இணைந்துள்ளனர்.


கடந்த மார்ச் மாதம் வருங்கால வைப்பு நிதியின் கொள்கை முடிவுகளை நிர்ணயிக்கும், மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம் டில்லியில் நடந்தது. இதில், 2021 - 2022ம் ஆண்டுக்கு, 8.1 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. முந்தைய ஆண்டு, 8.5 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில், வட்டி விகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021 - 2022ம் ஆண்டுக்கு, 8.1 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 1977 - 1978ம் ஆண்டில் தான் மிகவும் குறைவாக, 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது.


அதற்கு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் குறைவான வட்டி தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், சந்தாதாரர்களின் கணக்கில் வட்டி சேர்க்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.