கோவில் நிலத்தை அரசு பள்ளிக்கு ஒதுக்க கோரிய வழக்கு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 15, 2022

கோவில் நிலத்தை அரசு பள்ளிக்கு ஒதுக்க கோரிய வழக்கு

The Madurai branch of the High Court has dismissed a case filed seeking allotment of temple land to set up a government high school at Chirangattupatti near Natham in Dindigul district.

Arumugam of Chirangattupatti filed a welfare petition at the Madurai branch of the High Court: Chirangattupatti Government Secondary School was upgraded to a high school. There is no space to build a building for the high school. Considering the future of the village children, we sent a petition to the Commissioner of Charities asking for the land to be set aside for the school building. Should be ordered to take action.Thus it was stated.

In the petition filed by the Commissioner of the Treasury, he said that 'the temple land could not be sold or leased to the Department of Education'. Special session ordered. Therefore, it does not want to interfere with the order of the Treasury. We dismiss the petition.Thus ordered.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிரங்காட்டுப்பட்டியில், அரசு உயர்நிலைப் பள்ளி அமைக்க கோவில் நிலத்தை ஒதுக்க தாக்கலான வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. சிரங்காட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

சிரங்காட்டுப்பட்டி அரசு நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. உயர்நிலை பள்ளிக்கு கட்டடம் அமைக்க இட வசதி இல்லை.

கம்பிளியம்பட்டி கருப்பணசாமி கோவில் மானிய நிலம் தரிசாக உள்ளது. கிராம குழந்தைகளின் எதிர்காலம் கருதி, அந்த நிலத்தை பள்ளி கட்டடத்திற்கு ஒதுக்கக்கோரி அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டது.

அறநிலையத்துறை கமிஷனர் தாக்கல் செய்த மனுவில், 'கோவில் நிலத்தை கல்வித்துறைக்கு விற்பனை அல்லது குத்தகைக்கு வழங்க இயலாத நிலை உள்ளது' என, தெரிவித்தார்.

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.ஆனந்தி அமர்வு, வழக்கை விசாரித்து, பிறப்பித்த உத்தரவு:

கோவில் நிலத்தை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

எனவே, அறநிலையத்துறையின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. மனுவை தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.