பள்ளிகளில் மாணவர்களின் செயல்கள் நாளுக்கு நாள் மிகவும் மோசமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக மாறி உள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்த காலம் போய் ஆசிரியர்களை மாணவர்கள் தண்டிக்கும் காலமாக மாறி உள்ளது. படிப்பில் கவனம் செலுத்த கூறி ஆசிரியர்கள் கண்டித்தால் கூட பெரும் பிரச்னையாகி விடுகிறது. இதற்கு பெற்றோர்களும் துணை போகின்றனர். கொரோனா உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலையால் மாணவர்களின் கல்வி திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மாணவர்களிடம் கல்வி திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
ஆனால் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் மாணவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. பள்ளி முடிந்த பின்பு பள்ளி வளாகத்தில் நுழைந்து கட்டிடங்களை சேதப்படுத்துவது, ஆபாச வார்த்தைகள் எழுதுவது என ஒழுங்கீனத்தில் ஈடுபடுகின்றனர். இது குறித்து ஆசிரியர்கள் விசாரித்தால் அவர்களிடம் மோதல் போக்கில் ஈடுபடுகின்றனர். ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டதால் வரும் கால மாணவர்களின் வாழ்வு கேள்வி குறியாக உள்ளன.
இது குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர் நசீர் கூறியது, பள்ளி மாணவர்களின் செயல் நாளுக்கு நாள் ஒழுங்கீனமாக உள்ளது. பெரியவர் முதல் ஆசிரியர்கள் வரை யாருக்கும் மரியாதை கொடுப்பது கிடையாது, படிப்பில் கவனம் செலுத்தாமல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. ஆசிரியர்களும் அச்சம் காரணமாக கடமையை செய்ய ஆரம்பித்தால் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும். அதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.