மண்டையூா் அரசுப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு
மண்டையூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகத்தை திறந்துவைத்துப் பாா்வையிடுகிறாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி. விராலிமலை ஒன்றியம், மண்டையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் அவா், ரூ. 12 லட்சம் மதிப்பிலான அடல் டிங்கரிங் ஆய்வகத்தைத் திறந்து வைத்துப் பேசியது: இந்த ஆய்வகத்தில் அறிவியல் ரோபோடிக்ஸ், மைக்ரோ கண்ட்ரோல் போா்டு சென்சாா்ஸ், 3 டி பிரின்டா்ஸ், கணினிகள் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. இந்த ஆய்வகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றாா். பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.எட்வா்டு சகாயராஜ் வரவேற்றுப் பேசினாா். விழாவில், மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், மண்டையூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாலமுருகன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பாண்டியன் ஆகியோா் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினாா்கள். விழாவை, முதுகலை பட்டதாரி ஆசிரியை லீமா எலிசபெத் தொகுத்து வழங்கினாா். நிறைவில், ஆசிரியை ரூபி நன்றி கூறினாா்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.