60 கிராம நிர்வாக உதவியாளர்களின் பணியிடங்கள் அனைத்தையும் ஆட்சியர் ரத்து செய்து அதிரடி உத்தரவு..!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 1, 2022

60 கிராம நிர்வாக உதவியாளர்களின் பணியிடங்கள் அனைத்தையும் ஆட்சியர் ரத்து செய்து அதிரடி உத்தரவு..!!

யிலாடுதுறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 60 கிராம நிர்வாக உதவியாளர்களின் பணியிடங்கள் அனைத்தையும் ஆட்சியர் லலிதா ரத்து செய்து உத்தரவிட்டார். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, குற்றாலம், தரங்கம்பாடி ஆகிய தாலுகாவில் வருவாய்த்துறை மூலம் காலியாக உள்ள கிராம நிர்வாக உதவியாளர் பணி இடங்களை நிரப்புவதற்கு விளம்பரம் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் கடந்த மாதம் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை-16, குற்றாலம்-14, சீர்காழி, தரங்கம்பாடி- 15 என மொத்தம் 60 பணியிடங்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு, கடந்த வாரம் பணிநியமன ஆணையம் வழங்கப்பட்டது. இதில் வெளிப்படையான தன்மை இன்றி அரசாணை நிலை எண் 574-ல் தெரிவிக்கப்பட்டது. இதில் அரசு ரீதியிலான மற்றும் அரசாணை தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றாமல் மயிலாடுதுறை மாவட்ட கிராம உதவியாளர் பணிநியமனம் தொடர்பாக மயிலாடுதுறை, சீர்காழி, குற்றாலம், தரங்கம்பாடி வரை மேற்கொள்ளப்பட்ட விளம்பர அறிவிப்பு முதல் பணிநியமனம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்து மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா ஆணை பிறப்பித்தார். இச்சம்பவம் வருவாய்த்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.