PM YASASVI Scholarship 2026-27: OBC, EBC, DNT மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2026: ரூ.1.25 லட்சம் வரை பெறலாம் - முழு விபரம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 30, 2026

PM YASASVI Scholarship 2026-27: OBC, EBC, DNT மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2026: ரூ.1.25 லட்சம் வரை பெறலாம் - முழு விபரம்!



PM YASASVI Scholarship 2026-27: OBC, EBC, DNT மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை - முழு விவரங்கள்!



PM YASASVI Scholarship 2026-27: OBC, EBC, DNT மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2026: ரூ.1.25 லட்சம் வரை பெறலாம் - முழு விபரம்!

மத்திய அரசின் PM YASASVI கல்வி உதவித்தொகை 2026-27 திட்டத்தின் கீழ் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் OBC, EBC, DNT மாணவர்களுக்கான புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள் மற்றும் கடைசி தேதி பற்றிய முழு விவரங்கள்.

OBC, EBC & DNT இன மாணவர்களுக்கான PM YASASVI கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை ஆணையரின் செயல்முறைகள்!

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில், இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) மாணவ/மாணவியர்களுக்குப் பிரதம மந்திரியின் யசஸ்வி கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI Top Class Education in Schools) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (National Scholarship Portal) மூலமாக இப்பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது மற்றும் புதுப்பித்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

PM YASASVI கல்வி உதவித்தொகை திட்டத்தின் முக்கிய அம்சங்கள்



மத்திய அரசினால் பட்டியலிடப்பட்ட மற்றும் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ/மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் நேரடியாக வழங்கப்படுகிறது:

  • 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயில்பவர்கள்: ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.75,000/- வரை உதவித்தொகை வழங்கப்படும்.

  • 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயில்பவர்கள்: ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1,25,000/- வரை உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும், இத்திட்டத்தில் மாணவிகளுக்கென பிரத்யேகமாக 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் நிபந்தனைகள்



* மாணவ/மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

* வருமான வரம்பு: மாணவரின் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* 2025-26 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் அவசியமாகும்.

விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் முக்கிய தேதிகள்



1. கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் (Renewal):

கடந்த நிதியாண்டில் (2025-26) PM YASASVI கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ/மாணவியர்கள் நடப்பாண்டில் (2026-27) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் நிலையில், தங்கள் விண்ணப்பங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (https://scholarships.gov.in) வாயிலாக புதுப்பிக்க வேண்டும்.

* புதுப்பித்தலுக்கான கடைசி தேதி: 31.08.2026.

* பள்ளி அளவில் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் கடைசி தேதி: 15.09.2026.

2. புதிய விண்ணப்பங்கள் (Fresh Applications):

2026-27 ஆம் கல்வியாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ/மாணவியர்களுக்கான விண்ணப்பிக்கும் தேதி குறித்த விபரங்கள் NSP இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ இணைப்புகள்



தகுதியான மாணவ/மாணவியர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* National Scholarship Portal: https://scholarships.gov.in

* Ministry Official Website: http://socialjustice.gov.in

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.