சாதிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று பெற்றிருப்பவர்கள் / இல்லாத மாணவர்கள் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - The Director of School Education has issued an order seeking details on the number of students who possess—and those who do not possess—caste and residence certificates.
Based on the image provided, here are the key details:
Issuing Authority: This is an official proceeding from the Directorate of School Education, Chennai, dated June 11, 2026.
Purpose: The document outlines instructions for issuing community certificates and residence certificates directly to students in all schools (Classes 6 to 12) under the School Education Department.
Action Required: Schools are required to upload student data for these certificates via the "School Login App" to facilitate higher education enrollment, particularly for students in Classes 10 and 12.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6
5.5. 6 12328/6/2/2025 . 11.06.2026
பொருள்:
பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ/மாணவியர்களுக்கு பயிலும் பள்ளிகளிலே சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் வழங்குதல் சார்ந்து அரசாணை பெறப்பட்டது சான்றுகள் உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கை கோருதல் School Login App- பதிவேற்றம் மேற்கொள்ள செய்தல் - தொடர்பாக,
பார்வை
1. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதம் 5.5.6.012328/8/2/2025 20.03.2025.
2. அரசாணை (நிலை)எண்.06, (155(2) 09.01.2026. பள்ளிக் கல்வி
பார்வை 2 இல் காணும் அரசாணையில், பள்ளிக் கல்வித் துறையின் தொலைநோக்குத் திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வித் துறை கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ/மாணவியர்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் பயிலும் பள்ளிகளிலே மாணவர்களுக்கு வழங்க அரசாணை பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு இந்த இருவகை சான்றிதழ்கள் இன்றியமையாத ஆவணங்களாக உள்ளதால் அம்மாணாக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கி 9 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு செல்லும் மாணாக்கர்கள் மற்றும் 11 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு செல்லும் மாணாக்கர்களில் ஏற்கனவே சான்றிதழ்கள் பெற்றிருக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை மற்றும் இருவகை சான்றிதழ்கள் தேவைப்படும் வேண்டியுள்ளது.
மாணாக்கர்களின் எண்ணிக்கை அறிய எனவே, 2026-2027 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணாக்கர்கள் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களில் (இரு வகை சான்றிதழ்கள் பெற்றிருப்பவர்கள் விவரம் மற்றும் சான்றிதழ்கள் தேவைப்படும் மாணாக்கர்களின் விவரம் ஆகியவற்றை தமிழ்நாடு கல்வி மேலாண்மை தகவல் மைய School Login-இல் உடனடியாக சான்றுகள் பெற்றிருக்கும் மாணாக்கர்கள்/ தேவைப்படும் மாணாக்கர்கள் விவரங்களை ஆம்/இல்லை (Yes/No) என பதிவுகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கி இப்பணிகளை விரைந்து முடித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது..
பள்ளிக் கல்வி இயக்குநர்
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் மூலம்)
நகல்: அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள். (மின்னஞ்சல் வழியாக) நகல்:
வருவாய் நிருவாக ஆணையர்,
எழிலகம், சேப்பாக்கம், சென்னை -05 தகவலுக்காக பணிவுடன் அனுப்பப்படுகிறது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.