கல்வி அலுவலர்களுக்கான பள்ளிப் பார்வை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - School Visit Guidelines and Format - Joint Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 27, 2026

கல்வி அலுவலர்களுக்கான பள்ளிப் பார்வை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - School Visit Guidelines and Format - Joint Proceedings



கல்வி அலுவலர்களுக்கான பள்ளிப் பார்வை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள்

CEO/DEO/BEO/BRTE School Visit - Guidelines

CLICK HERE TO DOWNLOAD School Visit Guidelines and Format - Joint Proceedings PDF

புதிய பாடத்திட்டம் - 1,2,3 வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் அறிமுகம் - கல்வி அலுவலர்களுக்கான பள்ளிப் பார்வை குறித்த வழிகாட்டல் நெறிமுறைகள், ஆசிரியர் பதிவேடு மற்றும் பள்ளிப் பார்வைப் படிவம்.

Introduction of the new curriculum and new textbooks for Classes 1, 2, and 3, formulated based on the Tamil Nadu State Education Policy-2025; guidelines for school inspections by education officials - DEE, SCERT & DSE Joint Proceedings

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக் கல்வி இயக்கக இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்

ந.க.எண். 924911/ ஈ2 / 2026 , நாள். 25.06.2026. பொருள்

சென்னை -6 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை-2025இன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் 1,2,3 வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் அறிமுகம் கல்வி அலுவலர்களுக்கான பள்ளிப் பார்வை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - சார்பு.

பார்வை

1. அரசாணை (நிலை) எண்.129, பள்ளிக் கல்வித் (கஆப) துறை. நாள் 30.05.2025.

2. அரசாணை நிலை எண். 62. பள்ளிக்கல்வித் (கஆப) துறை, நாள்: 06.03.2026.

பார்வை 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில் 1 முதல் 12 வகுப்பு வரை கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தினை மாற்றியமைக்குமாறு இந்நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. பார்வை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கு 1 முதல் 3 வகுப்பு வரை புதிய பாடநூல்களை மாற்றியமைக்க இந்நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இவற்றைத் தொடர்ந்து, 2026-27ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 வரையிலான வகுப்புகளுக்கு முதல் பருவத்திற்கான புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகுப்புகளில் பள்ளிப்பார்வையை மேற்கொள்ளும் CEO/DEO/BEO/BRTE போன்ற அனைத்து கல்வி அலுவலர்களுக்குமான வழிகாட்டு நெறிமுறைகள், இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றது. இத்துடன் ஆசிரியர் பதிவேடு (Logbook) குறித்த விவரங்களும், பாடவாரியான பள்ளிப்பார்வைப் படிவங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பள்ளிப் பார்வை மேற்கொள்ளும் கல்வி அலுவலர்கள் இவற்றை முறையாகப் பின்பற்றி, வகுப்பறைக் கற்பித்தலை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிப் பார்வையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு : வழிகாட்டல் நெறிமுறைகள், ஆசிரியர் பதிவேடு மற்றும் பள்ளிப் பார்வைப் படிவம்.

இயக்குநர்

தொடக்கக் கல்வி இயக்ககம்

இயக்குநர்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.

இயக்குநர்

பள்ளிக் கல்வி இயக்ககம்

பெறுநர்

அனைத்து மாவட்ட ( ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள். மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள்.

CLICK HERE TO DOWNLOAD கல்வி அலுவலர்களுக்கான பள்ளிப் பார்வை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.