SSLC தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் வடமொழி எழுத்துக்களான க் ஷ மற்றும் ஸ்ரீ திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செயல்முறைகள் வெளியீடு! Publication of the procedures of the Directorate of Government Examinations regarding the correction of the vernacular letters கழ and சி in the SSLC provisional mark sheet
சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏப்ரல் 2026, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு- தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்-பள்ளி மாணவர்கள் - வட மொழி எழுத்துக்களான க் ஷ திருத்தங்கள்-தனித்தேர்வர்களின் பெயர், பெற்றோர் பெயர், பிறந்ததேதி மற்றும் புகைப்பட திருத்தங்கள் மேற்கொள்ள அலுவலகம் அனுப்பி வைத்தல் - சார்பு. தலைமை
பார்வை:
இவ்வலுவலக கடித ந.க.எண்.013061/பி1/2025, நாள்: 03.06.2026.
பார்வையில் காணும் கடிதத்தில் மார்ச் 2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பயிற்று மொழி, மொழிப்பாடம், பள்ளியின் பெயர் மற்றும் மாணவனது புகைப்படம் போன்றவற்றில் திருத்தங்கள் இருப்பின், அதனை சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர்கள் 03.06.2026 முதல் 10.06.2026 வரையிலான நாட்களில் தங்களுக்கான User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி www.dgeapp.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்திடுமாறு தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து திருத்தங்கள் கோரி பெறப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் பள்ளியின் பெயரில் திருத்தங்கள் இருப்பின், அதனை அப்பள்ளியின் User ID மற்றும் Password- பயன்படுத்தியே திருத்தங்கள் மேற்கொள்ள இயலும் என்பதால், உதவி இயக்குநர்கள் திருத்தங்கள் கோரும் பள்ளித் தலைமை ஆசிரியர்களை அவர்களது பள்ளியின் User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி 10.06.2026 பிற்பகல் 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்து முடித்திட அறிவுறுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், மார்ச் 2026 பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் கீழ்க்காண் திருத்தங்கள் இருப்பின்,
1. பள்ளி மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் வடமொழி எழுத்துக்களான க் ஷ திருத்தங்கள்
2. தனித்தேர்வர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் தேர்வர் பெயர், முகப்பெழுத்து, பிறந்ததேதி, பெற்றோர் பெயர், பயிற்று மொழி மற்றும் புகைப்பட திருத்தங்கள்
அவற்றினை உதவி இயக்குநர்கள் மேற்கண்டவாறு வகைப்படுத்தி, தனித்தனி முகப்பு கடிதத்துடன் திருத்தங்கள் கோரும் தேர்வரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகலினை இணைத்து பட்டியலிட்டு, 15.06.2026-க்குள் தலைமை அலுவலகத்தில் கிடைத்திடுமாறு துணை இயக்குநர் (இடைநிலை) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு விரைவஞ்சலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், “ஸ்ரீ" என்ற எழுத்து இடம்பெறக்கூடிய பெயரோ அல்லது முகப்பெழுத்தோ உள்ள தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் ஸ்ரீ என்ற எழுத்திற்கு பதில் ரீ என இடம் பெற்றிருந்தால், அவற்றினை உதவி இயக்குநர்கள் தங்கள் அலுவலக User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி "ஸ்ரீ" என இடம்பெற்ற பெயரை முழுவதுமாக நீக்கிவிட்டு புதிதாக அப்பெயரினை Type செய்து பதிவேற்றம் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒம்/- SSLC தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் வடமொழி எழுத்துக்களான க் ஷ மற்றும் ஸ்ரீ திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செயல்முறைகள் வெளியீடு!
DGE - ik sha Corrections Letter- Download here



No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.