போதைப் பொருள் பயன்பாடு தடுப்பு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்த வழிகாட்டுதல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியீடு - DSE செயல்முறைகள்!
Guidelines on the prevention of drug abuse and banned tobacco products released in Tamil and English – DSE Proceedings!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். சென்னை-06
ந.க.எண்.000987/எம்1/இ1/2026
நாள்:09.06.2026
பொருள்
பார்வை
பள்ளிக்கல்வி 2026- 2027 ஆம் கல்வியாண்டு தொடக்கத்தில் மாணவர்களுக்கு பள்ளிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வழங்குதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பு
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் தலைமைச் செயலகம் அவர்களின் கடித. στο 15670/HP&E(xvi)/2026-2, 03.06.2026 தமிழ்நாடு 2026-2027 ஆம் கல்வியாண்டு அனைத்து வகை பள்ளிகளிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே மாவட்ட பயிற்றுநர்களுக்கான பயிற்சியானது உள்துறை மூலம் வழங்கப்பட்டு அவர்கள் மூலமாக பள்ளி போதைப் பொருள் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நடத்திமுடிக்கப்பட்டது. தற்போது பள்ளி போதைப் பொருள் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்களை கொண்டு சார்ந்த பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திடவும் இப்பொருள் சார்ந்து மாவட்ட ஆட்சியரிடமும் கலந்தாலோசித்து செயல்படுத்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பயிற்சி மேலும் இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை காவல்துறை மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்களை ஒருங்கிணைத்து இம்மாத இறுதிக்குள் நடத்திமுடித்திடவும், இணைப்பில் கண்டுள்ள இணையவழி பூர்த்தி படிவத்தை பள்ளி போதைப் பொருள் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்களை கொண்டு பூர்த்தி செய்திடவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. This is an official memorandum from the Tamil Nadu Directorate of School Education regarding drug abuse awareness.
It instructs District Chief Educational Officers to organize awareness programs in schools for students from classes 9 to 12 for the 2026-2027 academic year.
The programs are to be coordinated with health, police, and public relations departments.
School coordinators are required to fill out an attached online form regarding these activities.
👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD DSE - Anti Drug Orientation PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.