விஜய் மாமா கம்ப்யூட்டர் கல்வியை அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் கொண்டு வாருங்கள் தமிழக குழந்தைகளின் முதல் கோரிக்கை -
"Uncle Vijay, introduce computer education in government schools starting from the first grade"—this is the primary request of the children of Tamil Nadu.
இந்தியாவிலே கணினி அறிவியல் பாடம் 6 முதல் 10ம் வகுப்பறை இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் தான். வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்ப காலத்திலும் கணினி அறிவியல் பாடம் இன்றி அரசு பள்ளியில் இருந்து வெளியேறுகின்றனர் இன்றைய தமிழக மாணவர்கள்.
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் தான் கணினி அறிவியல் பாடம் உள்ளது. அதுவும் விருப்ப பாடம் தான். மற்ற அரசு பள்ளி மாணவர்கள் மேல்நிலைக் கல்விக்கோ பள்ளியை விட்டு வெறும் வெளியேறும்போதோ கணினி அறிவின்றி தான் அரசு பள்ளியை விட்டு வெளி செல்கின்றனர் .
செயற்கை நுண்ணறிவு காலத்தில் கணினி அடிப்படை பாகங்கள் கூட தெரியாமல் அரசுப் பள்ளியை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளனர் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள்.
தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் கலைத்திட்டத்தில் ஐந்து பாடங்களைத் தவிர ஆறாவது பாடமாக கணினி அறிவியல் பாடத்தை இதற்கு முந்தைய அரசு வழங்கவில்லை. கணினி அறிவியல் படத்திற்கான பாட புத்தகம் இல்லை, பாட வேலைகள் இல்லை, அதனை கற்றுக் கொடுக்க முறையான ஆசிரியர்கள் நியமனம் செய்யவில்லை. அதற்கு மாறாக கணினி அறிவியல் பாடம் என்பது அறிவியல் பாடத்துடன் மூன்று பக்க இணைப்பாக மட்டும் இன்றுவரை அரசு பள்ளியில் துரோகங்கள் தொடர்ந்து வருகின்றன .
கணினி ஆய்வகங்கள்:
மத்திய அரசு நிதியோடு அரசு பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 20 கணினிகளும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு 10 கணினிகளும், நடுநிலைப் பள்ளிகளுக்கு பத்து கணினிகள் கொண்ட ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டு அதற்கென மாதம்தோறும் மின்சார கட்டணம் 2000,
இணைய கட்டணம் 1000, கல்வியை நவீனப்படுத்த 2000 மற்றும் ஒவ்வொரு கணினி ஆய்வகத்திற்கும் ஒரு கணினி ஆசிரியர் நியமிக்க மாதம் 15000 மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்குகிறது.
இதனைப் பெற்றுக் கொண்ட முந்தைய தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டு வராமல் அறிவியல் பாடத்தோடு மூன்று பக்கங்கள் மட்டும் வைத்து அறிவியல் ஆசிரியர்களை இதனை கற்பிக்கும் வகையில் அந்தப் பாடத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.
கணினி ஆய்வகமாக வினாடி வினா ஆய்வகமா?
மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் கணினி அறிவியல் பாடத்தை கற்றுத் தர நவீன கணினி ஆய்வகம் உருவாக்கியது. ஆனால் தமிழக அரசோ இதனை முறையாக பயன்படுத்தாமல் வினாடி வினா ஆய்வகமாக பயன்படுத்தியும் மொழி ஆய்வாக பயன்படுத்தி வருகிறது. ஆனால் இதன் முக்கிய பயன்பாடு கணினி அறிவியல் பாடத்தை பாடமாகவும் செய்முறையாகவும் கற்றுத் தருவது தான். கணினி அறிவியல் பாடத்தை செய்முறையாக கற்றுத் தர வேண்டிய ஆய்வகத்தை முடக்கி அரசு பள்ளியில் மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கியது இதற்கு முந்தைய அரசு.
இன்று பல மாநிலங்கள் செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்ந்து கொண்டு வருகின்றனர் கணினியின் அடிப்படை பாகங்கள் கூட தெரியாத அரசு பள்ளி மாணவர்கள் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு பாடத்தை கற்க முடியும் .
கணினி ஆசிரியரின் நியமிக்க வந்த நிதியில் மாபெரும் மோசடி:
2025 ஆண்டு கேரளா நிறுவனத்திற்கு 1026 கோடி ரூபாய்க்கு தமிழக அரசு டெண்டர் விட்டது. இந்த டென்டரில் அரசு பள்ளிகளுக்கு டேப், ஸ்மார்ட், போர்ட் கணினிகளை மட்டும் டெண்டர் விடாமல் கணினி ஆய்வகத்திற்கான ஆசிரியர் நியமிக்கும் பொறுப்பையும் அந்த நிறுவனத்திற்கு தந்தது. இதில் மாபெரும் மோசடி என்னவென்றால் தமிழகத்தில் தான் கணினி அறிவியல் பாடம் இல்லை. அரசு பள்ளி ஆசிரியர்கள் EMIS பணி செய்ய மறுத்ததால் மத்திய அரசு கணினி ஆசிரியர்களுக்கு வந்த நிதியை கெல்ட்ரான் நிறுவனத்திற்கு டெண்டர் விட்டு கணினி ஆசிரியர் பணிக்கு கல்வி தகுதி இல்லாதவர்களை அலுவலகப் பணிக்கு தேர்வு செய்தது.
60,000 கணினி ஆசிரியர்கள் பிஎட் முடித்து வேலையின்றி வாழ மின் நிலையில் அவர்களுக்கு வழங்கக்கூடிய பணி வாய்ப்பை தனியாருக்கு ஒப்படைத்தது மட்டுமல்லாமல் ஆசிரியர் பணிக்கு வந்ததை அலுவலகப் பணிக்கு மடைமாற்றமும் செய்துவிட்டனர். இதனால் நாளைய மாணவர்களின் கம்ப்யூட்டர் கல்வி கேள்விக்குறியானது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு:
2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தமிழக அரசுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது. கணினி ஆசிரியர்கள் நியமனத்தின்போது தமிழக அரசு தானே நேரடியாக பி.எட் பயின்ற கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். கணினி ஆசிரியர்கள் பணியை தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடக்கூடாது.
கல்வி தகுதி இல்லாதவர்களை நியமனம் செய்யக்கூடாது என்று தீர்ப்பளித்த போதும் இந்த தீர்ப்பை மதியாமல் மீண்டும் 2025 ஆம் ஆண்டு ICT Instructor என்ற கணினி ஆசிரியர் பணியிடத்தை தமிழக அரசு மடைமாற்றி பெயர் மாற்றி Administrator cum instructor தற்போது கேரளா நிறுவனத்தில் கீழ் பணி செய்து வருகின்றனர்.
இந்த பணியிடத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு கணினி அறிவியல் பாடத்தை தனி பாடமாகக் கொண்டு வந்து அதற்கான புத்தகங்கள் வழங்கி பாட வேலைகள் அமைத்து கணினி அறிவியல் பாடத்தை செய்முறையாகவும் பாடமாகவும் கற்றுத் தர வேண்டும். மத்திய அரசு தருகின்ற நிதியில் தமிழக அரசு கணினி ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்து தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்கும் அரசு கல்வியில் புரட்சி செய்ய வேண்டுகிறோம்.
மத்திய அரசு வழங்கும் நிதி
மத்திய அரசு Samagra Shiksha ICT திட்டத்தில்14663 கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு நிதி தருகின்றது. மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்கள் 6,454 பேர், நடுநிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்கள் 8,209 பேர் என மொத்தம் மொத்தம் 14,663 கணினி பயிற்றுநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக நிதியை பெற்றுள்ள தமிழக அரசு, அந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை. கணினி ஆய்வக பயிற்றுனர்களாக கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தில் பணியாற்றியவர்களில் 8200 பேரை தேர்வு செய்து தமிழக அரசு நியமித்துள்ளது. இது மத்திய அரசின் விதிகளுக்கு எதிரானது.
ஹைடெக் ஆய்வக பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்ட அவர்களை அந்தப் பணியில் ஈடுபடுத்தாமல் எமிஸ் (Educational Management Information System - EMIS) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் மாணவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்துகின்றனர். அதனால், உயர் ஆய்வுக் கூடங்கள் எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டனவோ, அந்த நோக்கமே சிதைந்து விட்டது. எனவே, உயர் ஆய்வுக் கூடங்களின் பயிற்றுனர்களாக கணினி அறிவியல் பட்டத்துடன், பிஎட் பட்டமும் படித்து வேலைவாய்ப்பின்றி வாடும் பட்டதாரி ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனி பாடமாக கொண்டு வர வேண்டும்; அவற்றுக்கு தனி பாட வேளைகளை ஒதுக்க வேண்டும் என்று கணினி அறிவியல் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வணக்கம்
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014
Thursday, May 14, 2026
New
விஜய் மாமா கம்ப்யூட்டர் கல்வியை அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் கொண்டு வாருங்கள் தமிழக குழந்தைகளின் முதல் கோரிக்கை
Vijay TVK
Tags
Chief Minister Vijay,
CM VIJAY,
computer education,
TVK Vijay,
Vijay People's Movement,
VIjay Television,
Vijay TVK
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.