கண்காணிப்பாளர் பதவியிலிருந்து DEO / JD -ன் நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு! Provisional List of Names Released for Promotion from the Post of Superintendent to Personal Assistant to the DEO/JD!
கண்காணிப்பாளர் பதவியிலிருந்து DEO / JD -ன் நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு! தமிழ்நாடு பொதுப்பணி - மாவட்டக் கல்வி அலுவலரின் / இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் பதவிக்கு 15.03.2026 அன்றுள்ளவாறு கண்காணிப்பாளர்களின் உத்தேச பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் - சேர்க்கை. நீக்கம், திருத்தம் கோருதல் -சார்ந்து.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், சென்னை - 6. ந.க.எண்.009952/அ3/இ1/2026,
நாள். 11.05.2026
பொருள்: தமிழ்நாடு பொதுப்பணி - மாவட்டக் கல்வி அலுவலரின் / இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் பதவிக்கு 15.03.2026 அன்றுள்ளவாறு கண்காணிப்பாளர்களின் உத்தேச பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் நீக்கம், திருத்தம் கோருதல் -சார்ந்து.
பார்வை :
சேர்க்கை,
1. அரசாணை எண்.707, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.03.07.1981
2. அரசுக் கடிதம் எண். 41065/ப.க.4 (2) துறை நாள் 04.03.2015 இன்படி வெளியிடப்பட்ட இருக்கை கண்காணிப்பாளர் திருத்திய தேர்ந்தோர் பட்டியல்
3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண். 23253/அ3/இ1/2014 நாள். 25.04.2015
4. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண். 014965/அ3/இ1/2025 நாள். 02.04.2025 5. அரசாணை (நிலை) எண். 20 மாற்றுத் திறனாளிகள் (DAP -3.2) நலத்துறை நாள். 20.06.2018
6. அரசாணை (நிலை) எண். 06 மாற்றுத் திறனாளிகள் (DAP -3.2) நலத்துறை நாள். 21.06.2025
வெளியிடப்பட்ட 15.03.2025 நிலவரப்படி தயாரித்து வெளியிடப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் / இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த கண்காணிப்பாளர்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டவர்கள் போக பெயர் பட்டியலில் மீதமுள்ள பதவி உயர்வு வழங்கப்படவேண்டிய கண்காணிப்பாளர்கள், பார்வை (2) ல் காணும் ஆணையின்படி பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்களின் பட்டியலிலிருந்து பதவி உயர்வும், பார்வை (3) இன்படி வெளியிடப்பட்ட முறையான கண்காணிப்பாளர்களின் பட்டியலிலிருந்து பணிமாறுதல் வழங்கி ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்ந்தோர் பட்டியலில் ஓய்வு பெற்ற, முதுகலை ஆசிரியர்களாக பணி மாறுதலில் சென்றவர்கள், விருப்ப ஓய்வு, இயற்கை எய்தியவர்கள் போன்றவர்கள் நீங்கலாக, ஒழுங்கு நடவடிக்கையில் இறுதியாணை, நீதிமன்ற தீர்ப்பாணைகளை செயல்படுத்துதல் போன்றவற்றின் மூலமாக முன்தேதியிட்டு வழங்கப்பட்ட ஆணைகளின் அடிப்படையில் உள்ள கண்காணிப்பாளர்களை 15.03.2026 நிலவரப்படி மாவட்டக் கல்வி அலுவலர் / இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு கண்காணிப்பாளர்களின் உத்தேச பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது.
2. இவ்வுத்தேச பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பணியாளர்கள் சார்பான அனைத்து விவரங்களும், பணிப்பதிவேடு. தொடர்புடைய ஆணைகள், ஆவணங்களின் அடிப்படையில் சரிபார்த்தல் வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவை, தண்டனைக்காலம் நடப்பில் உள்ளவர்கள் மற்றும் மாறுதலில் சென்றவர்கள், தகவலின்றி நீண்ட காலம் விடுப்பில் உள்ளவர்கள், ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பதவி உயர்வினை தற்காலிக/ நிரந்தர உரிமைவிடல் செய்தவர்கள் எவரேனும் இருப்பின் அதன் விவரத்தினை உடன் தெரிவிக்குமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்/ பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் பிற இயக்ககங்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
3.மேலும் உத்தேச பெயர்பட்டியலில் உள்ள கண்காணிப்பாளர்களில் பார்வை (6) இல் காணும் அரசாணைகளின்படி மாற்றுத் திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 இன்படி மாவட்டக் கல்வி அலுவலர் / இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் பதவி உயர்வில் கீழ்கண்டவாறு இட ஒதுக்கீடு (Reservation) வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
4. மேற்குறித்த மாற்றுத் திறனாளி பிரிவினர் இட ஒதுக்கீட்டின்படி தகுதிவாய்ந்த நபர்கள் எவரும் இருப்பின் அவர்கள் சார்பான விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தில் அனைத்து விவரங்களையும் தயார் செய்து அதற்கான தகுதிவாய்ந்த அலுவலரால் அளிக்கப்பட்ட அத்தாட்சி சான்றின் நகலினை முதன்மைக் கல்வி அலுவலரால் சரிபார்த்து சான்றொப்பமிட்டு பரிந்துரைத்து அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
5. இவ்வுத்தேச பெயர்பபட்டியலை அனைத்து பணியாளர்களுக்கும் அனுப்பி சரிபார்த்து ஒப்புதல் பெற்று கோப்பில் வேண்டும். மேலும், உத்தேச பெயர்ப்பட்டியலில் தகுதிபடைத்த நபரின் பெயர் விடுபட்ட நிகழ்வில்.
பெயர் பட்டியலில் சேர்க்கை செய்யக்கோரும் நபர்கள் சார்ந்து இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களை சரியாக பூர்த்தி செய்து, தனியரின் அனைத்து ஆவணங்கள் மற்றும் பணி பதிவேட்டுடன் முதன்மைக் கல்வி அலுவலரால் கூர்ந்தாய்வு செய்து, இணை இயக்குநரால் பரிசீலிக்கத் தேவையான அனைத்து ஆவணங்கள் அடங்கிய Folder ஐ முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைத்து இவ்வியக்ககம் அனுப்பிவைத்தல் வேண்டும். மேலும், பெயர் பட்டியலில் தகுதியில்லாத மற்றும் பிற காரணங்களால் நீக்கம் செய்யக்கோரும் நபர்களின் பெயர்கள் உத்தேச பெயர் பட்டியலில் இருப்பின் நீக்கம் செய்யக் கோரும் சரியான காரணத்துடன், உரிய ஆவண ஆதாரத்தின் நகலினையும், இதேபோல் பட்டியலில் உள்ள நபர்களில், திருத்தம் கோரும் நிகழ்வில், திருத்தம் செய்யக் கோரும் நபர்கள் சார்ந்த ஆவண ஆதாரத்தின் நகலினையும் முதன்மைக் கல்வி அலுவலரால் சரிபார்த்து பரிந்துரைத்து இவ்வியக்ககம் அனுப்பிவைக்கவேண்டும்.
6. உத்தேச பெயர் பட்டியலில் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் ஏதும் இல்லாத நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதத்தில் (வ.எண். பெயர், அலுவலகம் ஆகிய விவரங்களை தெரிவித்து அன்னார்களது பெயருக்கெதிரே) உத்தேச பெயர் பட்டியலில் உள்ள விவரங்கள் யாவும் சரியாக உள்ளது என தெரிவித்து முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் வண்ணம் அனுப்பிடல் வேண்டும்.
இவ்வியக்ககம் கிடைக்கப்பெறும் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்ட சேர்க்கை, நீக்கம், திருத்தம், மற்றும் இன்மை அறிக்கை ஆகியவை 18.05.2026 க்குள் எவ்வித நினைவூட்டலுக்கும் இடமின்றி இவ்வியக்ககம் அனுப்பிவைக்க தெரிவிக்கப்படுகிறது.
இச்செயல்முறைகள் பெறப்பட்டதற்கான ஒப்புதலை உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் சார்ந்து தங்களது மாவட்டத்தில் 7 இயக்ககத்தில் தகுதிபடைத்த கண்காணிப்பாளர்கள் இல்லையெனில் இன்மை அறிக்கையினை தவறாது அனுப்பிவைத்தல் வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD DSE - PA Panel Tentative - Proceeding PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.