ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 24, 2026

ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

This document is an official proceeding from the Directorate of Elementary Education, Chennai, regarding the end-of-year procedures for the 2025-26 academic year.

Teachers must upload student marks for classes 1 through 8 into the EMIS portal by April 30, 2026.

School administrators are required to update school infrastructure details on the EMIS portal by April 30, 2026.

Teachers must obtain approval from Block Educational Officers for student results by April 30, 2026.

Transfer certificates will be available for download via the EMIS portal starting May 11, 2026, for students completing their studies.

ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

30.04.2026 க்குள் மதிப்பெண் தேர்ச்சி அறிக்கைக்கு BEO அவர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

11.05.2026 முதல் மாணவர்களுக்கு T.C வழங்கலாம்...

தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்



பொருள்:

தொடக்கக் கல்வி 2025-26ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வு மாணவர் மதிப்பெண் EMISல் பதிவேற்றம் செய்தல் - தேர்ச்சி அறிக்கைக்கு வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் ஒப்புகை பெறுதல் மாற்றுச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பார்வை:

1) தொடக்கக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்: 3675/ ஜெ2/2026, :04.03.2026

2) சென்னை 6, தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல் முறைகள், ந.க.எண்: 3636/ ஜெ2/ 2025, நாள்: 25.03.2026

3) தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் இணை செயல்முறைகள், ந.க.எண் : 48688/எம்1/இ1/2026, : 09.04.2026

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து சுரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றுள்ளன.

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களுக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கிட அறிவுறுத்தப்படுகிறார்கள். 1) 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வில் 1 முதல் 8 வகுப்பில் பயின்ற மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை சார்ந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் 30.04.2026ஆம் தேதிக்குள் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

2) ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் / ஆசிரியர் தங்களது பள்ளி EMIS 2 User Name -> Password -> Home Page -> Approvals -> SIDS -> DEE-School Infrastructure Details -> Assessment of infrastructure Needs-ὦ κείται விவரங்களை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப update செய்து Submit கொடுக்கும் பணியை 30.04.2026ஆம் தேதிக்குள் முடித்திட வேண்டும். மேற்படி DEE-School Infrastructure Details-ஐ பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் முழுமையாக update செய்து நிறைவு செய்தமையை வட்டாரக் கல்வி அலுவலர்கள் கூர்ந்தாய்வு செய்திட வேண்டும்.

3) மாணவர் தேர்ச்சி அறிக்கைக்கு 30.04.2026ம் தேதிக்குள் வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் / ஆசிரியர்கள் ஒப்புதல் பெற்றிட வேண்டும்.

4) 2025-26ஆம் கல்வியாண்டில் கற்றல் செயல்பாட்டை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் வசதி மற்றும் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி அளித்தலை 11.05.2026 முதல் EMIS இணையதளம் வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.