ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை தொடங்கும். எனினும் பள்ளி இறுதிவேலை நாள் வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்.1 முதல் 16-ம் தேதிவரை நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதே போல், 1 முதல் 9-ம் வகுப்புமாண வர்களுக்கான முழு ஆண்டு மற் றும் இறுதிப் பருவத் தேர்வுகள் ஏப்.10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதை யடுத்து 1 முதல் 9-ம் வகுப்புவரை முழுஆண்டு தேர்வு முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறி வித்தது. அதைத்தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான தேர்வுக்கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி, 6முதல் 9ம்வகுப்பு களுக்கு ஏப்.1 முதல் 16-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள் ளன. 4, 5-ம் வகுப்புகளுக்கு ஏப். 6-ல் தொடங்கி 16-ம் தேதி வரை
யும், 1, 2, 3-ம் வகுப்புகளுக்கு இறுதி பருவத்தேர்வுகள் ஏப்.8 முதல் 16-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன.
இந்த கால அட்ட வணையை பின்பற்றி உரிய வழி காட்டுதல்களோடு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்துவித பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப். 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். எனினும், பள்ளி இறுதி வேலை நாள் வரை ஆசிரி யர்கள் பணிக்கு வரவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
This image is a news report in Tamil detailing the updated schedule for annual examinations for students in grades 1 through 9 in Tamil Nadu.
Exams for Grades 6-9: Scheduled from April 1st to April 16th.
Exams for Grades 4-5: Scheduled from April 6th to April 16th.
Exams for Grades 1-3: Scheduled from April 8th to April 16th.
Summer Vacation: Starts on April 17th for all students in grades 1-9.
Saturday, March 21, 2026
New
பள்ளி இறுதிவேலை நாள் வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக்கல்வித் துறை
teachers news
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.