TET தேர்விற்கு தாமதமின்றி பணிச் சான்று (Service Certificate) வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 6
115.67. 1282505/11/2025, . 27.03.2028
பொருள்
தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுயநிதிப் பிரிவின் கீழும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2026 தேர்விற்கு விண்ணப்பிக்க பணிச்சான்று வழங்குதல்-வழிகாட்டு நெறிமுறைகள் - சார்ந்து.
பார்வை
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை, நாள்.13.02.2026.
பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுயநிதிப் பிரிவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில், 01.09.2025 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் பிற அதற்கு இணையான பணிநிலைகளில், காலமுறை ஊதியம் / தொகுப்பூதியம் / பகுதிநேர ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டுப் பணிபுரியும் ஆசிரியர்கள், BRTE-க்கள், பிற அதற்கு இணையான பணிநிலைகளில் உள்ளவர்கள் மற்றும் சிறப்புப் பயிற்றுநர்களுக்காகவும் (IEDSS), பணிபுரியும் ஆசிரியர்களுக்காக தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் எனவும் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2026 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க பணிச்சான்று அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பதிவேற்றம் செய்ய வேண்டியது பணிச்சான்றினை 10.04.2026 முன்னரே வழங்குதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணிச்சான்று கிடைக்கப்பெறாமலோ அல்லது தாமதமாகக் கிடைக்கப்பெற்றாலோ அதனால் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, இந்நிகழ்வில் தனிக்கவம் செலுத்தி, காலம் தாழ்த்தாமல் மேற்கூறிய அனைத்து ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணிச்சான்று வழங்குமாறு சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: பணிச்சான்று விவரப் படிவம்
This document outlines guidelines for issuing service certificates to teachers in Tamil Nadu for the Teacher Eligibility Test (TET) - 2026.
Eligibility: Teachers working in government, government-aided, and recognized private schools as of September 1, 2025, are eligible to apply.
Purpose: Service certificates are mandatory for registering for the TET 2026 exam.
Deadline: District and Block Educational Officers must issue certificates before April 10, 2026, to ensure timely application submission
Sunday, March 29, 2026
New
TET தேர்விற்கு தாமதமின்றி பணிச் சான்று (Service Certificate) வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
TET exam RESULTS
Tags
DEE,
DEE PROCEEDINGS,
Special Teacher Eligibility Test,
special teachers,
Special TET,
TET EXAM,
TET exam RESULTS
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.