பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் அயலி - பாகம் 2 திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Director of School Education's actions regarding the screening of the February children's film Ayali - Part 2
பொருள்!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600 006
ந.க.எண்.034785 எ / இ1 2025, நாள், 06/02/2020
பள்ளிக்கல்வி-கல்விசாரா மன்றச் செயல்பாடுகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2025-26 பிப்ரவரி மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பு
பார்வை
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், கடிதம் ந.க.எண்.034785 எம்/இ1/2025, நாள் 23,012026 உலகமெங்கும் திரைத்துறை வாயிலாக திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும், மாற்றங்களும் ஏராளம். திரைப்படங்களால் மாணவர்களுக்கு அறம் மற்றும் சமத்துவ கருத்துகள் பற்றின புரிதலை.கலந்துரையாடல்களின் வாயிலாக எளிதான வகையில் ஏற்படுத்திவிட முடியும். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் முன்னெடுப்புகளில் அனைவராலும் பாராட்டப்பட்ட மிகவும் முக்கியமான நிகழ்வு சிறார் திரைப்படங்களை பள்ளிகளில் திரையிடுதல். மாணவர்களுக்கு சமூக நீதி, சமத்துவம், அறிவியல் பார்வை ஆகியவற்றைப் பற்றின விழிப்புணர்வு மற்றும் அதன் மீதான பார்வையை எற்படுத்துவதற்கும், மாணவர்கள் திரைப்படங்களை பகுத்தறிவுடன் அணுகுதல், தங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் ஆகிய பண்பு நலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் போன்ற நோக்கத்துடன் மாதந்தோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திரைப்படம் திரையிடப்படுகிறது.
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.