ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் - ஜாக்டோ - ஜியோ
தமிழ்நாடு அரசின் பேச்சுவார்த்தை பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது . ஏற்கனவே அறிவித்தவாறு ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் - ஜாக்டோ - ஜியோ ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO)
(Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)
ஊடகச் செய்தி
फ्रानं.22.12.2025
தமிழ்நாடு அரசின் பேச்சுவார்த்தை பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏற்கனவே அறிவித்தவாறு ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும்.
25.11.2025 அன்று சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 13.12.2025 அன்று மாவட்ட தலைநகர் உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்லாயிரம் அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
2026 ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறவுள்ள பின்னணியில் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர், மாண்புமிகு நிதி அமைச்சர், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோருடன் ஜாக்டோ-ஜியோவின் 10 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிற்பகல் நடைபெற்ற (22.12.2025) கடந்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி கீழ்க்காணும் நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் சக்தியாக நடத்துவது என முடிவாற்றப்பட்டது. 1. 27.12.2025 மாவட்ட தலைநகரில் கருப்பு அட்டை அணிந்து வேலை நிறுத்த ஆயத்த மாநாடு.
2. 2026 ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.
கண்டனத் தீர்மானம்
1. பேச்சுவார்த்தை என்று சொல்லி ஜாக்டோ-ஜியோ மற்றும் அரசு ஊழியர், ஆசிரியர் இயக்கங்களை அழைத்து, கோரிக்கையைச் சொல்லுங்கள் என்று கருத்துக்கேட்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தியதற்கு ஜாக்டோ-ஜியோ கண்டனத்தைப் பதிவு செய்கிறது. 1
2. ஜாக்டோ-ஜியோ பேரமைப்பில் அங்கம் வகிக்கும், போராடும் சங்கங்களைத் தவிர்த்து, சில சங்கங்களை மட்டும் பேசுவதற்கு அழைத்த தமிழ்நாடு அரசின் மனித வள மேலாண்மைத் துறையின் முறையற்ற செயலை ஜாக்டோ-ஜியோ கண்டிக்கிறது.
3. ஓய்வூதியக்குழுவின் காலக்கெடு முடிந்து 3 மாதங்கள் ஆன நிலையிலும் அதன் அறிக்கையைக்கூட பெற முடியாத அரசாக இருப்பதை ஜாக்டோ-ஜியோ கண்டிக்கிறது.
JACTTO-GEO PRESS NEWS 22.12.2025
👇👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD JACTTO-GEO Press NEWS 22.12.2025

The explanation of 9xflix in this blog is quite useful.Looking forward to reading more posts like this. 9xflix
ReplyDelete