SIR பணிச்சுமை - ஆசிரியர் உயிரிழப்பு
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஜெய்ப்பூரின் டோல்பூர் நகரில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அனுஜ் கார்க்(42). இவர் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணிகளில் வாக்குச்சாவடி நிலை அதிகாரியாக நியமிக்கட்டார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டில் சிறப்பு திருத்த தரவுகளை பதிவேற்றம் செய்து கொண்டு இருந்ததாக தெரிகின்றது. அப்போது அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு வரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அதிக பணிச்சுமை காரணமாக நாள்தோறும் இரவில் வெகுநேரம் அவர் வேலை செய்து கொண்டு இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.