14 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தி அரசு உத்தரவு
தமிழகத்தில் 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை:
நிகழ்கல்வியாண்டில்(2025-2026) 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என சட்டப்பே ரவை மானியக் கோரிக்கையின் போது துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, கரைய வெட்டி (அரியலூர்), சிறுக்களஞ்சி (ஈரோடு), மேட்டு நாசுவம்பாளை யம் (ஈரோடு), நத்தம் (கடலூர்), பாப்பநாய்க்கன்பாளையம் (திருப் பூர்), மேல்செட்டிப்பட்டு (திருவண் ணாமலை), ஒட்டியம்பாக்கம், கீரப் பாக்கம் (செங்கல்பட்டு), காந்திநகர் (உதகை), காணை (விழுப்புரம்), விரு துநகர், அணைக்கட்டுச்சேரி, சீனி வாசபுரம் (திருவள்ளூர்), கொடிக்கு ளம் (மதுரை) ஆகிய 14 இடங்களில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள் ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதுதவிர அங்கிருந்த 1 முதல் 5-ஆம் வகுப்புகள் பிரிக்கப்பட்டு தனி தொடக்கப் பள்ளிகளாக உரு வாக்கப்படுகின்றன. தரம் உயர்த்தப் பட்டுள்ள 14 பள்ளிகளில் தலா 3 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், தலா 2 பட்டதாரி ஆசிரியர் கள் பணியிடங்கள் புதிதாக தோற் றுவிக்கப்பட்டுள்ளன. இவற்றை உபரி ஆசிரியர்களின் பணிநிரவல் மூலம் நிரப்பலாம்.
அதேபோல், அந்தப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் பணியி டங்கள் உயர்நிலைப் பள்ளி தலை மையாசிரியராக நிலை உயர்த் தப்படுகிறது. புதிதாக உருவாக் கப்பட்டுள்ள தொடக்கப் பள்ளி களில் தலைமையாசிரியர் பணி யிடங்கள் ஏற்படுத்த வேண்டும். அதற்கு இணையான இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை பொதுத் தொகுப்புக்கு சரண் செய் யலாம். தரம் உயர்த்தப்பட்ட பின் னர் இந்தப் பள்ளிகளில் மாண வர் எண்ணிக்கையை உறுதிப்ப டுத்திக்கொள்ள வேண்டும். இந் தப் பணிகளுக்கான ஒட்டுமொத்த செலவினங்களுக்காக 5.3.84 கோடி ஒதுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.