இந்திய ராணுவத்தை விமர்சித்த சென்னை பேராசிரியை பணியிடை நீக்கம்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்நிலையில் இந்திய ராணுவத்தை விமர்சித்து கருத்து தெரிவித்த சென்னை பேராசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் லோரா என்பவர், சமூக வலைத்தளங்களில் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விமர்சிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக தெரிகிறது.
அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட பேராசிரியை லோராவை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.