தமிழக அமைச்சரவையில் மாற்றம் - 2 அமைச்சர்கள் விடுவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 28 أبريل 2025

தமிழக அமைச்சரவையில் மாற்றம் - 2 அமைச்சர்கள் விடுவிப்பு!



தமிழக அமைச்சரவையில் மாற்றம் - 2 அமைச்சர்கள் விடுவிப்பு!

அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

செந்தில்பாலாஜி நிர்வகித்து வந்த மின்சாரத் துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறையும் காதி துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பொன்முடிதான் வனத்துறை வகித்து வந்தார். வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமீன் வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார்.

மேலும், சமீபத்திய சர்ச்சை பேச்சால் பொன்முடிக்கு எதிராக பலரும் (திமுக எம்.பி. கனிமொழியும்) கண்டனம் தெரிவித்த நிலையில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்தது. இதனையடுத்து, அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடியும் விடுவிக்கப்பட்டார்.

மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்

சட்டப்பேரவை உறுப்பினரான மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.

எம்.எல்.ஏ. மனோ தங்கராஜையும் அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்த நிலையில், கோரிக்கைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.